யூட்யூப் மூலம் தவறான வார்த்தைகள் பேசி தன்னுடைய 8 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை மோசமாக வழிநடத்த முயன்ற youtuber மதன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மதன் மனைவி க்ருத்திகாவும் இதற்கு உடந்தை என்பதால் அவரைத்தான் முதலில் காவல்துறை கைது செய்தது.
தன்னைப் பிடிக்க முடியாது அப்படியே பிடித்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதித்த பணம் இருப்பதால் தன்னை ஒன்றுமே செய்ய முடியாது என்று youtuber madhan தலைமறைவாக இருந்தபடி சவால் விட்டார்.
ஆனால் தமிழ்நாடு காவல்துறை தன்னுடைய வீரியத்தை காட்டி மதனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
மனைவி காவல் துறையிடம் சிக்கிய பின்னரும் கூட வெளிவராத மதனை பொறி வைத்து பிடித்தனர் காவல் துறையினர். இந்நிலையில் மதன் தனக்கு ஜாமீன் வேண்டும் என்கிற மனுவை கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் தாக்கல் செய்தார்.
பிக் பாஸ் ஜோடிகளில் இருந்து வனிதா வெளியேற இவர்தான் காரணமா ?
மனைவி கிருத்திகாவும் தனக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்ய கோர்ட் 8 மாதக் குழந்தையின் நலன் கருதி கிருத்திகாவிற்கு ஜாமீன் அளித்தது. ஆனால் மதனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே நேரம் இன்று மதன் ஜாமீனில் வெளிவராத படி அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது . இதைப் பற்றித்தான் அவரது மனைவி செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்,
இந்நிலையில் வெளியே வந்த கிருத்திகா செய்தியாளர்களை சந்தித்த போது மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தைப் பற்றி பேசினார். இந்த விஷயத்தை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார்.
அதைப்போலவே மதன் பண மோசடி எதுவும் செய்யவில்லை என்றும் சொத்துக்களை வாங்கவில்லை என்றும் கூறினார்.
கடந்த மாதம் 18ம் தேதி கைதான மதனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். youtube மூலம் சம்பாதித்த பணத்தில் சொகுசாக வாழ்ந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தவிர அவருடைய இரண்டு விலையுயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்து மதனின் வங்கிக்கணக்கையும் காவல்துறையினர் முடக்கி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும் தவறான வார்த்தைகளையும் வழிகளையும் விரும்ப 8 லட்சம் பேர் இருக்கிறார்கள் அதுவும் அவர்கள் நமக்கு அடுத்த தலைமுறையினர் என்பது தான் இவற்றுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.