அண்மையில் அதீத வேகம் காரணமாக மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தினார் யாஷிகா. அதனால் அவர் உடலில் பல அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்திருக்கின்றன. பல எலும்பு முறிவுகளை அவர் அனுபவித்து வருகிறார்.
அதுமட்டும் அல்லாமல் அவருடைய தோழி பவனி எனப்படும் வள்ளி செட்டி பவனி கார் விபத்தில் தூக்கியெறியப்பட்டு பலியானார், உடன் பயணித்த இரண்டு ஆண் நண்பர்கள் சீட் பெல்ட் போட்டிருந்த காரணத்தால் குறைந்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் Yashika சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். முதலில் அடையார் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Yashika அதன் பின்னர் மேல் சிகிச்சைகளுக்காக அப்பல்லோவில் அட்மிட் ஆனார்.
Table of Contents
பவனி பற்றிய உண்மை
இடுப்பெலும்பு முதல் வலது கால் எலும்பு போன்ற பல இடங்களில் யாஷிகாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதனையொட்டி அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் நடந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த Yashika சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதுவரை யாஷிகாவிடம் பவனி பற்றிய உண்மையைக் கூறாத பெற்றோர் நேற்று சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்ட பிறகு பவனி உயிருடன் இல்லை என்பதை தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. அதன் பின்னர் தன்னுடைய தவறை ஒரு உயிர் பலிக்கு பின்னர் உணர்ந்த Yashika தன் தற்போதைய மனப்போக்கையும் மன வலியையும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாயீஷாவை விவாகரத்து செய்துவிட்டு உன்னை மணக்கிறேன் – 70 லட்ச ரூபாய்க்காக ஈழப்பெண்ணை ஏமாற்றிய ஆர்யா ?
வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன்
அதில் இப்போது நான் என்ன வலியை உணர்கிறேன் என்பதைப்பற்றி என்னால் வெளியில் சொல்ல வார்த்தைகள் இல்லை . வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன் என்றும் கூறி இருந்தார்.
இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்திய பின்னர் உயிர் வாழவே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. என்னை உயிர் பிழைக்க செய்த கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது என் தோழி உயிரைப் பறித்ததற்காக கடவுள் மீது கோபப்படுவதா என்று எனக்கு புரியவில்லை.
பவனி நீ என்னை மன்னிக்க மாட்டாய் தானே ? உன்னை நிறைய மிஸ் செய்கிறேன். வாழும் ஒவ்வொரு நொடியும் உன்னை நான் தவற விட்டதற்காக வருந்துகிறேன். உன் குடும்பத்தார் என் மீது கோபமாக இருப்பார்கள். உன் குடும்பத்தாருக்கு இப்படி ஒரு வேதனையைக் கொடுத்ததற்காக நான் வருந்துகிறேன்.
உன் ஆத்மா நல்ல முறையில் சாந்தி அடையட்டும். நீ ஒரு நாள் என்னிடம் திரும்ப வர நான் பிரார்த்திக்கிறேன். உன் குடும்பத்தார் ஏதோ ஒரு நாள் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன்.
பிறந்த நாள்
என்று விரிவாக தன்னுடைய தற்போதைய மன உணர்வை வெளிக்காட்டி இருந்தார் Yashika. மேலும் நாளை யாஷிகாவின் பிறந்த நாள். ஆனால் தன்னுடைய பிறந்த நாளை தான் கொண்டாட போவதில்லை என்றும், இறந்த பவானியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறும் யாஷிகா கேட்டுக்கொண்டார்.
பவனி குடும்பத்தார் தன்னை ஒரு நாள் மன்னிக்க வேண்டும் என்றும் யாஷிகா அதில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி ஒரு எமோஷனல் பதிவை யாஷிகா போட்ட பின்னர் யாஷிகாவின் விபத்து பற்றிய பார்வை மாறி அவர் மீது பரிதாபம் உண்டாகி இருக்கிறது.
வலிகளுக்கு நன்றி
இருப்பினும் ஒரு சிலர் அதே பதிவில் யாஷிகாவை உங்கள் இன்னசென்ட் தோழியை சாகடித்து விட்டு நீங்கள் மட்டும் ஏன் உயிருடன் இருக்கிறீர்கள் பல சூடான கேள்விகளை முன்வைக்க அதற்கும் பதில் அளித்திருக்கிறார். சோசியல் மீடியா தரும் வலிகளுக்கு நன்றி என்று அந்த பதிலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆம். வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்தலே ஒரு வெட்கமான செயலாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானால் அதன் வலி எப்படி இருக்கும் என்று தெரியும் தானே…
தான் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறேன் என்பதை பற்றியும் Yashika குறிப்பிட்டிருக்கிறார். இன்னும் ஐந்து மாதங்களுக்கு படுக்கையில் தான் எல்லாமே எனவும்.. கழிவுகள் கூட படுக்கையில் தான் எனவும் அவர் மனம் நொந்து கூறி இருக்கிறார்.
இடுப்பெலும்பில் பல இடங்களில் பிராக்ச்சர் என்பதால் தன்னால் படுத்தபடி இந்தப்பக்கம் அந்தப்பக்கம் அசையக்கூட முடியாது எனவும் தனக்கு கடவுள் சிறந்த தண்டனையைத் தந்து விட்டதாகவும் ஆனால் தனக்கு உண்டாகி இருக்கும் இழப்பை விட இந்த தண்டனை பெரிதல்ல எனவும் Yashika வேதனைப்பட்டு பதிவிட்டிருக்கிறார்.
Alia bhatt மற்றும் Ranbir kapoor தான் சிறந்த காதலர்கள் – ஏன் தெரியுமா ?
விபத்து என்பது விரும்பி செய்வதல்ல என்றாலும் அதன் தற்காப்பு மற்றும் சில வேக விதிகள் மீறப்படும்போது இது நடக்க வாய்ப்புகள் உண்டாகின்றன.
எல்லாம் தெரிந்தும் தன் மீதான குருட்டுத்தனமான நம்பிக்கை பல சமயங்களில் விபத்து ஏற்படக் காரணமாகிறது. யாஷிகா போன்ற ஒரு பிரபலம் நடத்தியதால் இந்த விபத்தும் மற்றும் அதன் காரணங்களும் பல கோணங்களில் அலசி ஆராயப்பட்டதும் நல்லது தான்.
இனி வரும் காலங்களில் யாஷிகா மட்டுமல்ல.. இந்த விபத்தின் தன்மையை உணர்ந்த அனைவருமே வாகனம் ஓட்டும்போது சொல்லப்படுகிற விதிகளை யாரும் சொல்லாமலே கடைபிடிப்பார்கள் என நம்புவோம்.