• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

உங்கள் காதல் தேர்வுகள் ஏன் எப்போதும் தவறாகவே முடிகின்றன ?

Aug 4, 2021

 

நீங்கள் இதய உடைதலுக்காகவே விதிக்கப்பட்டுள்ளீர்களா? அல்லது நீங்கள் எப்போதும் உங்களை தவறான நபருடன் காண்கிறீர்களா? 

 

உங்கள் அன்பின் அர்த்தத்தை கவனமாக தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் வழக்கமான நம்பிக்கைக்கு மாறாக, நாம் காதலுக்கு அடிமைகள் அல்ல. குறிப்பாக காதலுக்கு பதிலாக அல்லது ஈடாக நாம் வைப்பது நம் மகிழ்ச்சியை என்பதை நினைவில் கொள்ளுங்கள். Love is a choice in tamil.

 

தவறான காதல் தேர்வுகள்

 காதல்

 

உன்னதமான காதல் கதைகளில், புத்திசாலித்தனமான மற்றும் திருப்தியான ஆன்மா மற்றும் மற்றும் அதோடு இணையும் உணர்ச்சிமிக்க காதலன் என  எப்போதும் ஒரே மாதிரியான திருப்தி உள்ளவர்களோடு இணைந்து வாழ முடியாது என்பது போல காட்டப்படுகிறது. எப்போதும் மாறுபட்ட குணங்கள் ஒன்றாகும் என அதில் சொல்லப்படுகிறது. 

 

ஆனால் விஷயம் என்னவென்றால், உங்களுக்குள் உண்டாகும் காதல் கற்பனையை நிறைவேற்றவும், உண்மையான,  அன்பை அனுபவிக்கவும், நீங்கள் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும். சமயங்களில் உங்கள் கதைகளில் உங்கள் இறுதி அத்தியாயம் சோகம் அல்லது கசப்பான தனிமையால் குறிக்கப்படலாம். Why do we choose a cheating person in our life in tamil.

 

காதல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

 காதல்

 

ஆழ் மனதில், நான் இந்த தூண்டில்களை பற்றி காதலில் மூழ்க அவற்றை விழுங்கினேன். அதன் பின் நான் மேலே சொன்னவைகள் எல்லாம் உண்மையாவதைக் கண்டேன். ஆம் காதல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான். ஆனால் அதன் உடன் வரும் மனவலி , துயரமான முடிவுகள் , நெஞ்சை அடைக்கும் வேதனைகள் பற்றியும் கொஞ்சம் அறிந்து கொண்டேன். 

 

என் விவாகரத்துக்குப் பிறகு யாரும் தீண்டாத என் மனதை ஒருவரிடம் ஒப்படைத்தேன். நான் கண்ணீரில் மட்டுமே முடிவடையும் ஒரு காதல் விவகாரத்தில் தலைகீழாக ஓடினேன். அது அவ்வாறே முடிந்தது. Love is abandoning me.

 

காதல் தேர்வுகள் விதியின் சுவர் மீது அதற்கான விளம்பரம் வானளவிற்கு இருந்தது. நான் அதைப் படித்தேன், அதை நோக்கி நடந்தேன். பேரழிவிற்குள் சென்றேன். நான் அதை விருப்பத்தோடு செய்தது மட்டுமல்லாமல், என் விலைமதிப்பற்ற இதயத்தைப் பராமரிக்காமலும் அல்லது என் உள்ளுணர்வை மதிக்காமலும் செய்தேன். ஆனால் என் அழகான இதயம் அதன் குரல் கரகரக்கும் வரை  இதை செய்யாதே என்று இறைஞ்சியது . 

உங்கள் காதல் காயங்களை எப்படி மறப்பது ?

ஆபத்தான தொடர்புகள்

 காதல்

 

இந்த டேட்டிங் ஒரு புதுமையாக இருந்தது. நான் ஏற்கனவே இதயம் உடைந்து இருந்தேன். ஓயாத தனிமை மற்றும் என் வயிற்றில் தீராத ஒருவித வலியுடன் இருந்தேன். அதனால் என்னை விட 11 வயது இளையவர் மற்றும் அவரது பெற்றோருடன் வாழும் ஒரு நபர் என்னை டேட் செய்ய விரும்பிய போது நான் சரி என்றுதான் தலையசைக்க வேண்டி இருந்தது. False dating in tamil.

 

ஒரு வயதான பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதில் அவர் நேர்மையாக இருந்தார். நான் உறுதியாக சொன்னேன், அப்படியே இருக்கட்டும். என் வாழ்வில் காதல் தேர்வுகள் நடந்தவைகளுக்கும் மேல் எனக்கு என்ன கெடுதல் நடந்து விடப் போகிறது ? 

 

ஆனால் எங்கள் உறவில் முற்றிலும் சீரற்ற சூழ்நிலைகள் இருந்தபோதிலும் நாங்கள் காதலித்தோம் மற்றும் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தோம். Relationship failures in tamil.

 

எங்கள் புத்திசாலித்தனமான இழுபறியான இந்த உறவின் தொடக்கத்தில், நான் அங்கே அவனுக்கு தாயாக இருந்தேன். செலவுகள் செய்தேன். அவர் இன்னும் தனது வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தார் மற்றும் இறுதியில் அவருக்கு என ஒரு குடும்பத்தை உருவாக்கவும் விரும்பினார்.

 

ஒரு கட்டத்தில் கூட என்னை எங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக நான் பின்வாங்கவில்லை. காரணம் இது காதல். காதலில் இருக்கும்போது என்னால் எதுவும் செய்ய முடியாது இல்லையா?

பொய்யர்கள் 6 வகைப்படுவார்கள் – அவர்களை எப்படி சமாளிப்பது ?

ஐந்து காதல் மொழி

 காதல்

 

எனக்குத் தேவையானதை ஒருபோதும் வழங்க முடியாத மக்களுடன் காதல் பழகுவது எனக்கு விதிக்கப்பட்ட பேட்டர்ன் ஆனது. ஒரு உணர்ச்சிவசப்பட்ட ஆத்மாவாக கேரி சாப்மேன் தனது தலைப்பு புத்தகத்தில் மேற்கோள் காட்டியபடி, நான் ஐந்து காதல் மொழிகளிலும் சரளமாக இருந்தேன். 

 

என்னால் தரமுடியாத பரிசுகளை நான் உங்களுக்கு வழங்குவேன்,  நீங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுவேன், நீங்கள் ஒரு நறுமணமுள்ள குளியலை நடத்த உதவி செய்வேன், உங்கள் உணவை உருவாக்கி, உங்கள் காலில் முத்தமிடுவேன்.

 

ஆனால் தகுதியற்ற மற்றும் பொருத்தமற்றவர்களுக்கு மேற்கண்டவற்றை கொடுப்பதில் நான் மிகவும் பிஸியாக இருந்தேன், அதற்கு பதிலாக எனக்கு தகுதியானது கிடைப்பதை உறுதி செய்ய மறந்துவிட்டேன்.

 

நான் சுதந்திரமாக பேச வேண்டும், அதனால் நான் ஒரு இறுக்கம் இல்லாத பங்குதாரரை தேர்வு செய்கிறேன், நான் பாசமாக இருக்கிறேன், எனவே இந்த தனித்துவமான பனி ராணியை நான் கொடுக்கும் அன்பால் உருக்க முயற்சி செய்கிறேன்.

 

நாங்கள் ஒன்றாக அனுபவிக்க நல்ல விஷயங்களை ஏற்பாடு செய்கிறேன். அதற்கு பதிலாக திரும்பக் கொடுப்பது பற்றி யோசிக்காத நபரை நான் தேர்ந்தெடுக்கிறேன். 

 

சரிபார்ப்புப் பட்டியல்

 காதல்

காதலுக்கான சரிபார்ப்புப் பட்டியல் விரும்பத்தகாதது மற்றும் முற்றிலும் அசாதாரணமானது என்று நான் கருதிக் கொண்டு இருந்தேன். ஆனால் இந்த அனுபவங்களுக்கு பிறகு நான் அறிந்து கொண்டது அது அவசியமான ஒன்று என்பது தான் . 

 

குறைந்தபட்சம் குழந்தைகளைப் பெறுவது, வாழ்க்கை முறை, பணத் தத்துவம், வாழ்க்கையின் நிலை மற்றும் எதிர்காலத்திற்கான கனவுகள் போன்ற பேச்சுவார்த்தை இவை அனைத்தும் இந்த சரிபார்ப்பு பட்டியலை சார்ந்துதான் இருக்கிறது. இவற்றை நீங்கள் மனதில் கொள்ளுங்கள். 

 

உங்களுக்கு நீங்களே தாழ்வாக உணர்கிறீர்களா? குறைந்த சுய மதிப்பு – அதற்கான உளவியல் காரணங்கள்

 

 காதல்

 

காதல் இறுகப்பிடித்த ஒரு ஆணி போல இருக்க முடியாது.  நீடித்த காதலுக்கான பாதையின் சாலையில் முட்கள் இருக்கிறது. இதனைத் தவிர்க்க ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் வேறு வழியில் செல்லலாம். 

 

உளவியலில், இது ஏஜென்சி என்று அழைக்கப்படுகிறது. உங்கள் இதயத்தை ஒரு தட்டில் வழங்க விரும்பும்போது அது யாரை அடைய வேண்டும் என்பதை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்.  உங்கள் சிறப்புத் தேவைகளை காதலின் பெயரால் நிராகரிக்கவோ அல்லது அன்பின் பெயரால் பருக நீரின்றி பசியோடு இருக்கவோ வேண்டாம்.

 

நாம் அனைவரும் நமக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்க வேண்டியது நீண்ட கால வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று. காதலின் பெயரால் உங்கள் மகிழ்ச்சியை பணயம் வைத்து மீட்க முடியாமல் அல்லாடும் என்னைப் போல இல்லாமல் உங்கள் வாழ்வாவது சௌக்கியமாக ததும்பி வழியும் காதலுடன் இருக்க என் பிரார்த்தனைகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *