நேற்று இரவில் இருந்து VJ ஆனந்த கண்ணனின் மறைவு செய்து பலரின் தூக்கத்தை பறித்திருக்கிறது. அரிய புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த VJ ஆனந்த கண்ணன் நேற்றிரவு சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்திருக்கிறார். VJ Anandha kannan passed away.
இது நாள் வரை தமிழக தொலைக்காட்சிகளில் வராத ஆனந்த கண்ணன் இன்று காலை முதல் ஒரு இடம் விடாமல் அனைத்து வகையான ஊடகங்களிலும் வந்திருக்கிறார்.. ஆனால் அது அவர் மரணம் குறித்தான செய்தியுடன் என்பது தான் மனம் கனக்க செய்கிறது.

90களின் இறுதியில் தொலைக்காட்சி புது வடிவம் பெறத் தொடங்கியது. சிங்கப்பூரை சேர்ந்த VJ ஆனந்த கண்ணன் சன் டிவியில் பணியாற்றுவதற்காக 2001ல் இருந்து 2011 வரை சென்னையில் தங்கி மக்களை தன்னுடைய ஒருங்கிணைப்பு மூலம் மகிழ்வித்தவர்.
அப்போதைய மீடியா உலகின் மிக ஸ்டைலிஷ் VJ யார் என்றால் அது நம் ஆனந்த கண்ணன் மட்டும்தான். பெப்சி உமா, ப்ளேட் தீனா , சுரேஷ் சக்கரவர்த்தி எனப் பல தொலைக்காட்சி பிரபலங்களுக்கு நடுவே தனித்து தெரிந்தவர் VJ ஆனந்த கண்ணன். #AnandaKannan
திருமணம் முடித்த சில மாதங்களில் 7 மாத கர்ப்பமாக இருக்கும் கயல் ஆனந்தி !
#ANANDAKANNAN SIR INTERVIEW WITH THALAPATHY pic.twitter.com/dwvApAVtc6
— A H K🙂 (AJJU) (@AHKAJJU1) August 17, 2021
குறும்பு பேச்சுக்களால் மனம் கவர்ந்த இவர் பெயருக்கு ஏற்றாற்போல எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார். சிங்கப்பூர் தமிழரான VJ ஆனந்த கண்ணன் தன்னுடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போதே அதில் இருந்து விலகி பிசினஸ் செய்தார். அது தவிர சிங்கப்பூரில் தமிழை வளர்க்க தமிழக கிராமிய கலைகளை உலகம் எங்கும் சேர்க்க விரும்பினார். அது தொடர்பான பல நிகழ்ச்சிகளை அந்த ஊரில் இருந்து அவர் நடத்தி வந்திருக்கிறார்.

சிங்கப்பூரை சேர்ந்த தன் துறையைச் சார்ந்த தொகுப்பாளினி ராணி என்பவரை மணந்த இவர் அதன் பின் பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையுமானார் . இருப்பினும் இந்த இளம் வயதில் இவர் மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிராமியக் கலைகள் அழியாமல் இருக்க அதற்கான வகுப்புகளும் எடுத்து அந்தக் கலைகளை பலரிடம் கொண்டு சென்றிருக்கிறார். சிந்துபாத் சீரியல் மூலம் புகழ் அடைந்தாலும் தொடர்ந்து அதன் பக்கம் அவர் செல்லாமல் நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்க நினைத்த VJ ஆனந்த கண்ணன் உண்மையில் மிகவும் கனிவான மனம் கொண்டவர் என்று அறியப்படுகிறது.
அற்புதமான ஆத்மா என்றால் அது VJ ஆனந்த கண்ணன் தான் என்கிறார் அவரது நெருங்கிய தோழி NSK ரம்யா.
Anandha Kannan Throwback Video!#RIPAnandaKannan #RIPAnandhaKannan #AnandaKannan #AnandhaKannan pic.twitter.com/53zKYp8OQL
— Galatta Media (@galattadotcom) August 17, 2021
மிகவும் அன்பானவராக இருந்த இவர் சிறு வயதில் திருமணம் செய்து கொண்டவர். எல்லாம் நிறைவாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் ஆசன குடல் புற்று நோய் மூலமாக விதி இவர் மரணத்தை நிர்ணயித்து இருக்கிறது.
Cholangiocarcinoma அல்லது bile duct cancer எனும் இந்தக் குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இருப்பினும் புற்று குடல் முழுதும் பரவியதால் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக 70 வயதுக்கு மேல்தான் இந்தப் புற்று நோய் தாக்கும் என்றாலும் அரிதான முறையில் 48 வயதே ஆன ஆனந்த கண்ணன் இந்தப் புற்று நோய்க்கு பலியாகி இருக்கிறார்.
தற்போதைய நிலையில் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கி 90ஸ் கிட்ஸ் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உங்கள் ஆன்மா அமைதியாக எங்கள் பிரார்த்தனைகள் . #RIPanandakannan