• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

மீண்டும் துணிகிறேன் – விக்ரம் திரைப்படம் பற்றி கமல்ஹாசன் ட்வீட்

Jul 11, 2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் விக்ரம் முதல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அது முதல் சினிமா ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். 

ஏற்கனவே டீஸர் வெளியான நிலையில் அதன் இம்பாக்ட் யாராலும் மறந்திருக்க முடியாது. வாழையிலை விருந்துக்கு நடுவே அரிவாள்கள் தெறிக்கும் டீசர் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருந்தது. 

ஆகவே இது வெறும் பர்ஸ்ட் லுக் தானே என்று அசால்டாக நினைக்க கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டு விஜய்சேதுபதி, கமல்ஹாசன் மற்றும் பகத் பாசில் மூவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி இருப்பது போல இது டிசைன் செய்யப்பட்டுள்ளது. 

முகத்தில் ரத்தக் காயங்களுடன் நிற்கும் இந்த மூவர் பின்னணி குறித்து அறிய ஆவலாக இருக்கிறது. இருப்பினும் இது விருமாண்டி போஸ்டரின் காப்பி எனவும் பலர் கூறுகின்றனர். 

உள்ளே தோன்றும் ஒரு புதிய ஐடியா பின்னால் பல சப்கான்சியஸ் பதிவுகள் அடங்கி இருக்கின்றன. ஆகவே இதுவும் அந்த ரகத்தில் வரவே வாய்ப்புகளும் இருக்கிறது. 

vikram
vikram

இந்த மாத இறுதியில் இந்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த முதல் லுக் போஸ்டர் பற்றி நடிகர் கமல்ஹாசனும் அவருக்கே உரிய அழகிய தமிழில் சில வரவேற்பு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். 

அந்த டிவிட்டர் பதிவில் “வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம் விக்ரம்… விக்ரம்” எனக் கூறி இருக்கிறார். விக்ரம் திரைப்படத்தை திரைகளில் பார்த்த தலைமுறைக்கு மட்டுமே அந்த சந்தோஷங்கள் புரிய வரும். 

vikram
vikram

ஆகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாம் மூன்று நடிப்பு சிகரங்களை பார்க்க இருக்கிறோம். அதற்காக இன்னும் சில நாட்கள் காத்திருப்போம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *