பிக் பாஸ் தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு என்கிற நிலையில் பிக் பாஸிற்கு போட்டி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஆகச் சிறந்த ரியாலிட்டி ஷோவை ஜீ தமிழ் இறக்கியிருக்கிறது. Zee tamil Survivor review
முதல் நாளில் இருந்தே இந்த விளையாட்டு பெரும்பாலான மக்களை கவர்ந்திருக்கிறது. ஒரு வீட்டிற்குள் அமர்ந்து பாதுகாப்பாக க்ரூப் சேர்ந்து சண்டையிட்டு மன உறுதியோடு போராடி ஜெயிப்பது பிக் பாஸ் என்றால் கண்களுக்குத் தெரியாத சவால்களில் துணிச்சலோடு இறங்கி குழுவாக இணைந்து போராடுவது சர்வைவர் எனலாம். வெற்றியாளருக்கு ஒரு கோடி என்பது கூடுதல் சிறப்பு.
முதல் நாளிலேயே இந்த நிகழ்வை நடத்தி செல்லும் நடிகர் அர்ஜுன் நம் மனங்களை அவருடைய இயல்பான பேச்சால் கவர்கிறார். எந்தவிதமான எதுகை மோனை, ஜாடை பேச்சு, நக்கல் நையாண்டி போன்ற அதீத அறிவுக்கூர்மைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு மிக இயல்பாக இந்த சர்வைவர் நிகழ்ச்சியை அழகாக கொண்டு செல்கிறார் அர்ஜுன்.
16 போட்டியாளர்கள்

ஹெலிகாப்டர், ஆப்பிரிக்க தீவு, லைவ் ரெக்கார்டிங் என பார்க்கும் நம்மை வியக்க வைக்கும் அளவிற்கான பட்ஜெட் உடனடியாக நம்மை இந்த நிகழ்விற்குள் கொண்டு செல்லத் தூண்டுகிறது. 16 போட்டியாளர்கள்.. அவர்கள் இரு குழுவாக பிரிக்கப்படுகின்றனர்.
மிக யதார்த்தமாக எந்த ஒரு பீடிகைகளும் இல்லாமல் ப்ரொபைல் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களான விக்ராந்த் மற்றும் லக்ஷ்மிப்ரியா இரண்டு குழுக்களுக்கும் தலைவராகியிருக்கின்றனர்.
காடர்கள் அணிக்கு விக்ராந்தும் வேடர்கள் அணிக்கு லக்ஷ்மிப்ரியாவும் தலைமை தாங்குகின்றனர். விக்ராந்த் அணியில் இந்த்ரஜா, காயத்ரி ரெட்டி, லேடி காஷ் , சரண் சக்தி, உமாபதி , விஜயலக்ஷ்மி , ராம் சி ஆகியோர் இருக்கின்றனர்.
லக்ஷ்மிப்ரியா அணிக்கு பார்வதி, அம்ஜத்கான், பெசன்ட் ரவி, ஸ்ருஷ்டி டாங்கே, லக்கி நாராயண், நந்தா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கின்றனர்.
முதல் டாஸ்கில் தளர்ந்த விக்ராந்த்
முதல் டாஸ்க் என்பதே மிக சவாலானதாக இருக்கிறது. தீவின் கடலுள் படகு நிற்க அங்கு சென்று அடுத்த நாட்களுக்கான உணவை அவர்கள் சேகரித்து வர வேண்டும். கரையில் இருந்து 1 முதல் 1.5 கிமீ தூரம் இருக்கிறது அந்த படகு. அதே நேரம் ஆழமும் அதிகம்.. காடர்கள் அணித்தலைவர் விக்ராந்த் பயந்து ஹெல்ப் கேட்டு பின்வாங்கும் நிலையில் அதன் வேகம் இருக்கிறது. Zee tamil Survivor review
இருப்பினும் ஐஸ்வர்யா துணிச்சலான வேகத்துடன் முன்னேறி தன்னுடைய அணிக்காக உணவுகளை சேர்த்தார். சிறிது நேரத்தில் சக்தி சரண் தன்னுடைய காடர்கள் அணிக்காக படகில் ஏறி உணவுகளை சேகரிக்கத் தொடங்கினார். அவருடன் காயத்ரி ரெட்டி இணைந்து உணவை சேகரித்து திரும்ப வருகையில் காயத்ரி ரெட்டி நீருக்குள் மூழ்கத் தொடங்க உதவி என கூக்குரலிடுகிறார்.. அதைக் கண்டுகொண்ட ஐஸ்வர்யாவோ அவருடைய வேலையை கவனமாக பார்க்கிறார். இப்படியாக இரு அணிகளுக்கும் இடையிலான முதல் கசப்பு நிகழ்கிறது.
இதனிடையில் கரைக்கு வந்து தங்களுக்கான வாழ்விடங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இரு குழுவினரும் ஈடுபடுகின்றனர். காடர்கள் அணி தீ வேண்டும் என்பதால் தீ உருவாக்கும் கருவியைத் தேட, வேடர்கள் அணியோ உண்ண பழங்கள் கிடைக்கும் தீவு தங்களுக்கு வேண்டும் என்று பெட்டர் ஐலேண்ட் தேடுகின்றனர்.
அதோடு அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நேற்றும் இன்றைக்குமான நிகழ்வுகளையும் இதிலேயே பார்த்து விடலாம்.
தொற்றுநோய்களின் போது உங்கள் திருமணம் நடக்க இருக்கிறதா ? பாதுகாப்பாக திட்டமிட 7 குறிப்புகள்
காடர்கள் குழு
நேற்றைக்கு அவரவர் தேர்ந்தெடுத்த தீவிற்கு சென்று செட்டில் ஆவதுதான் கான்செப்ட். தீ உருவாக்கும் கருவி தேடிய காடர்கள் குழு கேம்ப்பயரில் குளிர்காய்ந்து அமைதியடைய பெட்டர் ஐலேண்ட் சென்ற வேடர்கள் குழுவோ இருட்டில் தவிக்கிறார்கள். எப்படியோ அந்த இரவை கழிக்கிறார்கள்.
அதன்பின்னர் காடர்கள் குழுவிலும் மற்றும் வேடர்கள் குழுவிலும் அந்த வாரத்திற்கான தலைவரைத் தேர்ந்தெடுக்க குறிப்பு வருகிறது. அது பற்றி விவாதிக்கின்றனர். மேலும் இரு குழுவினரும் அவரவர் தங்கிக்கொள்ள ஒரு கூடாரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
வேடர்கள் குழு
பார்வதி அடுத்த மீரா மிதுனோ என்று யோசிக்கத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார். உள்வாங்கி கொள்ளும் பொறுமையற்று சட்டென அனைவரிடமும் நேரடியாக பேசுகிறேன் பேர்வழி என்று அவர்கள் குழுவினரை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை அவர் அறியவே இல்லை என்பதுதான் ஹைலைட்.
நந்தா பார்வதியை பொறுமையாக ஹேண்டில் செய்ய, ஸ்ருஷ்டியோ சற்று கடுப்பாகிறார். அம்ஜத் அதற்குமேல் எதிர்வினை ஆற்றுகிறார். பார்வதியோ மற்றவரை தான் வெறுப்பேற்றுவது தெரிந்தும் மேலும் அங்கே தான் செய்த வேலைகளை பற்றி நந்தாவிடம் எடுத்துரைக்கிறார். நான் தேங்காய் எடுத்து கொடுத்தேன் நீங்களும்தானே சாப்பிட்டீங்க என்று நந்தாவிடம் அவர் கேட்கும்போது நமக்கே அடக்கடவுளே… வந்து ஒரு நாளுக்குள்ளேயேவா என்றுதான் தோன்றுகிறது. Zee tamil Survivor review
வந்திருக்கும் வேலையோ சவால்களை குழுவாக சந்திப்பது ஆனால் செய்து கொண்டிருக்கும் வேலையோ தன்னுடைய பங்கை பற்றி பெருமையடித்து என்பதாக பார்வதி செய்து கொண்டிருந்தார். பார்வதியுடனான மனக்கசப்போடு நேற்றைய நிகழ்வு முடிந்திருந்தது.
பஞ்சாயத்து கூட்டம்
இன்று ட்ரைப் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுகிறது. அர்ஜுனைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . முன்பே முடிவு செய்யப்பட்டபடி இரண்டு குழுவிலும் இரண்டிரண்டு பேர் தலைவராக இருக்க போட்டியிடுவதாக சொல்லப்பட்டது.
ஸ்மார்ட் செல்லங்களான காடர்கள் டீமில் காயத்ரி ரெட்டி மற்றும் லேடி கேஷ் நின்றனர். சலசலப்பு அடைந்த வேடர்கள் குழுவில் நந்தா என்ன நினைத்தாரோ திடீரென தனக்கு பதிலாக லக்ஷ்மிப்ரியாவை நிறுத்தி விட்டார். பார்வதி முடிவு செய்தது போல ஐஸ்வர்யா நின்றார். ஆனால் அதிக ஓட்டுக்கள் லக்ஷ்மிக்கே விழுந்தன.
கடுப்பான பார்வதி அர்ஜுனிடமும் வில்லங்கமாகவே பேசிக்கொண்டிருந்தார். சர்ச்சைகளை உருவாக்கி விட்டு அதன் பின் ஐ பீல் லோன்லி என்பது என்ன நியாயம் என்பதுதான் புரியவில்லை. நாம் ஒரு குழுவோடு ஆளரவமற்ற தீவில் இறக்கி விடப்பட்டிருக்கிறோம்.. அங்கே இணைந்து பல வேலைகளை செய்ய இருக்கிறோம் என்பது புரியாமல் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாளில் குழுவோடான தன்னுடைய குற்றசாட்டுகளை கொட்டித் தீர்த்தார் பார்வதி.
தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் நால்வரும் ஒரு சோதனை மூலம் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். இதில் அதிக ஓட்டு பெற்ற லேடி கேஷ் தோற்றார். லேடி கேஷிற்கு ஓட்டு போட்ட சரணையே தன்னுடைய பலமாக்கி ஜெயித்தார் காயத்ரி ரெட்டி.
வேடர்கள் குழுவில் லக்ஷ்மிப்ரியா மற்றும் ஐஸ்வர்யா இடையே கடுமையான போட்டி இருந்தது. பந்துகளை தடுப்பதில் வலிமையாக இருந்ததால் லக்ஷ்மிப்ரியா அதில் வெற்றி பெற்றார். லக்ஷ்மிப்ரியாவிற்காக ஒட்டு போட்ட அம்ஜத் ஐஸ்வர்யாவுடன் இணைந்து அவரைத் தோற்கடிக்க நின்றதும் சுவாரஸ்யமான ஒன்றுதான். Zee tamil Survivor review
வெற்றி பெற்ற தலைவர்களுக்கு தனிகுடிசை ஒன்று வழங்கப்படுமாம். அதை அவர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டுமாம். அதோடு இரண்டு குழுவிடம் இருந்தும் விடை பெற்றார் அர்ஜுன்.
எடை குறைத்த நடிகைகள் லிஸ்டில் இணைந்த லாஸ்லியா .. அதிர்ச்சியூட்டும் புகைப்படம்
பார்வதி பஞ்சாயத்து
இரண்டு குழுக்களும் அவரவர் தீவுக்கு திரும்பி விட.. மீண்டும் பார்வதி பஞ்சாயத்து தொடர்ந்து நடைபெறுகிறது. நந்தா பின்வாங்கியது பற்றியும் பார்வதி பேசுகிறார். நந்தாவும் ஸ்ருஷ்டியும் பார்வதிக்கு எதிரான கருத்தில் ஒரு புள்ளியில் இணைகின்றனர்.
இன்றைக்குள்ளாக இந்த பிரச்னையை முடித்துவிட நந்தா விரும்புகிறார். இரவு அனைவரும் கூடும்போது அதைப்பற்றி பேசலாம் என ஸ்ருஷ்டியிடம் கூறுகிறார்.
ஆனால் மாலை மங்கும் வேளையில் ஆரம்பித்த கூட்டம் இருட்டும் வரை தொடர்கிறது. பார்வதி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். என்னப்பா யாரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாப்பா என்கிற வடிவேலு வாய்ஸ் தான் நமக்கு தோன்றுகிறது.
யதார்த்தமாக ஓடி வரும் பார்வதி தடுக்கி விழவே அவரைப் பார்த்து அனிச்சை நிகழ்வாக ஸ்ருஷ்டி சிரித்து விட்டார் போல. அதுதான் முதல் நாளில் இருந்தே பார்வதி படபடக்க காரணமாக இருந்திருக்கிறது. மேலும் ஸ்ருஷ்டியிடம் கேமரா வைத்தால் மட்டுமே வேலை செய்வீர்களா என்றும் கேட்டு அவரையும் சங்கடப்படுத்தியிருந்தார். Zee tamil Survivor review
அதைப்பற்றியும் இன்று ஸ்ருஷ்டி கேள்வி எழுப்பினார். ஆனால் பார்வதியோ அசால்டாக அனைத்தையும் எதிராளியிடம் தள்ளி விட்டு நான் என் மனதில் இருந்ததை சொல்லி விட்டேன் என்கிறார்.
ஆனால் லக்ஷ்மிப்ரியா உண்மையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கூலாக இருக்கிறார். பிரச்னைக்கான முற்றுப்புள்ளியை பொறுமையாக இருட்டி முடிந்த வேளையில் வைக்கிறார்.
இத்தோடு இன்றைய எபிசோட் இனிதே முடிவடைந்தது.
சர்வைவர் நிகழ்ச்சி
உயிர் வாழவே போராட்டம் நடத்த போகும் கண்டெஸ்டண்ட்களோடு சர்வைவர் நிகழ்ச்சி உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் தான் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தது போல் நடந்து கொள்ளும் பார்வதி தான் அதில் ஆச்சர்யமான ஒன்றாகத் தெரிகிறார். முதல் நாளிலேயே வராத போரைத் தானாகத் துவக்கி விட்டதால் பின்னர் மீதம் இருக்கும் நாட்களில் அதே போல வாளை வீசிக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்கிற இடத்திற்கு அவர் தள்ளப்படலாம்.
பார்க்கலாம். போகப்போக பலரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
இந்தப் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட். எப்படியும் கேமரா குழுவினருடன் ஒரு க்ரூ அவர்களுடன் இருக்கும் என்றாலும் அவர்கள் என்னதான் செய்கிறார்கள் எப்படி சிரமப்படுகிறார்கள் இது கேமரா மேஜிக், ஸ்க்ரிப்டட் வெர்ஷனா அல்லது ரியல் வெர்ஷனா என்பது இன்னும் சில நாட்களுக்குள் தெரிந்து விடும்.
அதற்கு முன்
அர்ஜுன் சார்.. ரியலி வி லவ் யூ.
இட்ஸ் எ கிரேட் ஸ்டார்ட்.. ப்ளீஸ் இப்படி எங்களோடு எப்போதும் இருங்கள் !