• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

சாரா ‘ஸ் – 70mm பார்வை

Jul 10, 2021

சாரா ‘ஸ் – OTT தளத்தில் வெளியாகும் எல்லாப் படங்களும் சமூகத்தை உயர்த்தும் நோக்கில் எடுக்கப்படுகிறது என்று நம்மால் சொல்லி விடவே முடியாது. அதற்கு நேரெதிராய் முடியக் கூடிய பல ஜானர்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால் மலையாளத் திரைப்படங்கள் இதற்கு பெரும்பாலும் விதிவிலக்கானது. மலையாளத்தில் தற்போது எடுக்கப்படும் திரைப்படங்கள் சமூகத்திற்கான செய்தியை மிக அழுத்தமான முறையில் பதிகின்றன. அதற்காகவே அவர்களை நாம் பாராட்டத் தான் வேண்டும். Saara’s Malayalam movie review in tamil

குழந்தை பெறுவது எனும் அத்தியாயம் தன் வாழ்வில் நடக்க வேண்டாம் என்று விரும்பும் பெண் சாரா. இதற்காக இரண்டு முறை காதல் செய்து பிரேக் அப் செய்ய அவளுக்கு தைரியம் இருந்தது.

இயக்குனர் கனவில் வளரும் பெண்ணிற்கு எப்போதும் தன்னுடைய திரைக்கதை தான் முதல் முக்கியமானது. ஆகவே அதற்கு நடுவே பிள்ளை பெற்று அதனை வளர்க்க 20 வருடங்கள் நேரம் செலவழிப்பது அவசியமா என்கிற வித்யாசமான கோணம் அவளுக்கு மட்டும் தட்டுப்படுகிறது.

சாரா

Sara
Sara

அதையே பிடித்துக் கொண்டு நாட்களை நகர்த்துகிறாள். இதற்கிடையில் தன்னுடைய ஸ்க்ரிப்ட் வேலைகளுக்காக ஒரு மருத்துவரின் உதவியைப் பெறும் சமயம் மருத்துவரின் தம்பிக்கும் குழந்தைகள் பிடிக்காது என்பது தெரிய வருகிறது.

வீட்டில் அப்பா மாதத்திற்குள் உனக்கான மாப்பிள்ளையை நீ தேர்வு செய்யாவிட்டால் நான் அதைச் செய்வேன் என்று நெருக்கடி கொடுக்க தன்னைப் போலவே குழந்தைகளை வெறுக்கும் மருத்துவரின் தம்பியான ஜீவன் சாரா காதல் கொள்கிறாள். saara’s jeevan and love

காதலுக்கு நடுவே – குழந்தை பெற்று அவர்கள் வளரும் வரை அவர்கள் குணநலன்களை வளர்ப்பதில் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 20 வருடங்கள் வரை குழந்தைகளுக்காகவே வாழும் வாழ்வை அவள் வெறுப்பதற்கான காரணங்களை கூறிக் கொண்டே வருகிறாள்.

அதனை ஜீவனும் ஒப்புக் கொள்கிறான். தனக்காக தன்னுடைய பிள்ளைகள் கண்ணீர் சிந்துவதை விட தான் பெரிய ஐகான் ஆக மாறி தன்னுடைய மறைவிற்குப் பின் இந்த உலகமே கண்ணீர் சிந்த வேண்டும் என்று சாரா உறுதியாக நிற்கிறாள்.

குழந்தை வேண்டாம்

Sara's
Sara’s

குடும்ப நெருக்கடி காரணமாக அவர்களுக்குள் திருமணமும் நடக்கிறது. ஆனால் இரண்டு குடும்பமும் இணைந்த ஒரு விருந்து வேளையில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதைப் போட்டு உடைக்கிறாள் சாரா.

இதைக் கேட்ட உடன் ஜீவனின் தாயார் உடைகிறார். சாராவின் அம்மா அறிவுரை சொல்ல அதற்கு லாஜிக்கான கேள்விகள் மூலம் பதில் சொல்கிறாள் சாரா. யாராலும் சாராவை சமாதானம் செய்ய முடியாமல் போகிறது. அனைவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள்.

சரிசமம்

ஜீவனும் சாராவும் ஒருவரை ஒருவர் புரிந்து சரிசமமாக நடந்து தங்கள் திருமண வாழ்வை கழிக்கிறார்கள். ஜீவனுக்கு ப்ரோமோஷன் வரும் அதே நாளில் சாராவின் ஸ்க்ரிப்ட் பல தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்படுகிறது. அதே நேரம் ஒரே ஒரு தயாரிப்பாளர் இதற்கு ஒப்புக் கொள்கிறார். saara and her fate in tamil

விதி

சாரா
சாரா

ஆனால் விதி அங்கே வேறொரு முடிவு எடுக்கிறது. சாரா கர்ப்பமாகிறாள். கான்ட்ராசெப்டிவ் எடுத்தும் எப்படி என்று குழம்பி இருக்கையில் மருத்துவரிடம் செக் செய்த போது அது குழந்தைதான் என உறுதி செய்யப்படுகிறது.

ஆனாலும் தன்னுடைய முடிவில் சாரா தெளிவாக இருக்கிறாள். அந்த கர்ப்பம் ஒரு ஆக்சிடன்ட் என்கிறாள். கான்ட்ராசெப்டிவ் பெயிலியர் என்கிறாள். அதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் கூறுகிறாள். மருத்துவர் வீட்டில் கலந்து பேசி மறுநாள் வருமாறு கூறுகிறார்.

அலுவலக நண்பன் மூலமாக சாரா கர்ப்பமாக இருப்பதை ஜீவனின் அம்மா மற்றும் மருத்துவ சகோதரி அறிந்து அதனை வாழ்த்தி வரவேற்கிறார்கள். ஜீவனும் சாராவும் தனித்து பேசி எந்த முடிவும் எடுக்க முடியாதபடிக்கு ஜீவனின் அம்மா அவர்கள் உடன் தங்குகிறார்.

ஜீவனுக்கும் தகப்பன் ஆசை மேலோங்க அப்படியே அமைதி காக்கிறான். குழந்தை விஷயத்தில் சாரா என்ன முடிவு எடுத்தாள் என்பது மீதிக் கதை.

முக்கிய நபர்கள்

அன்னா பென் இந்த திரைக்கதையை தாங்கும் சாராவாக வர , சன்னி வெய்ன் சாராவை நேசிக்கும் கணவனாக வருகிறார். பெண்ணின் உரிமை பற்றிய கருத்து சொல்லும் இந்த திரைப்படத்தை இயக்கியவர் அஜய் ஹரிஷ் மற்றும் ஜூட் ஆண்டனி ஜோசப் எனும் இரு ஆண்கள்.

இந்தியாவில் குழந்தை பெறுவது என்பது இறைவன் தரும் வரமாக பார்க்கப்படுகிறது. இதையே இந்தப் படம் கேள்வி கேட்கிறது எனலாம்.

கவுன்செலிங் மருத்துவரின் வார்த்தைகள் அதாவது வசனங்கள் பெண்களால் மறக்கப்பட கூடாத வசனங்களாக மாறியிருக்கிறது எனலாம். பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர்கிறார்கள். 5000 வருடங்களாக உயர்ந்திருந்த ஆணின் பிடி இப்போது தளர்கிறது.

அது இரண்டு பாலினத்தையும் குழப்புகிறது. ஆணுக்கு அதில் அதீத குழப்பங்கள் மற்றும் பயங்கள். ஏதோ ஒரு தலைமுறை இந்த அழுத்தத்தை சுமந்தால் தான் அடுத்தடுத்த தலைமுறைகள் சீராகும். துரதிர்ஷ்டவசமாக அது நம் கண்ணெதிரே நம் பிள்ளைகள் சுமக்கும் அழுத்தமாக போய்விட்டது என்பதில் பலருக்கும் வருத்தங்கள் இருக்கலாம்.

ஆனாலும் இறைவன் கணக்கில் எந்த மாற்றமுமில்லை. எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை அவர் நன்றாகவே அறிந்தவர். ஆகவே அதற்கான முடிவுகளும் சிறந்ததையே தரும் என்பதில் சந்தேகமுமில்லை.

நெஞ்சில் அறையும் வசனங்கள்

சாரா
சாரா

சாராவின் வாழ்வில் அவள் எடுக்கும் முடிவும் அதற்கு முன் அவள் காட்டிய தயக்கமும் அவள் கேட்கும் கேள்விகளும் நம்மை நிச்சயமாக ஆச்சர்யப்படுத்துகின்றன.

உதாரணமாக மாமியாரிடம் குழந்தையை அபார்ஷன் செய்வதாக கூறுகிறார் – அதற்கு மாமியார் கனிவோடு அறிவுரை கூற.. நீங்கள் இரண்டு குழந்தைகளை பெற்று அவர்களை வளர்ப்பதையே உங்கள் கடமையாக செய்தீர்கள். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவர்களை உருவாக்க செலவு செய்தீர்கள். ஆனால் இன்றைக்கும் இந்த ஊரை விட்டு உங்களை பார்க்க உங்கள் பிள்ளைகள் வந்ததுண்டா என்று கேட்கிறாள்.

அப்படியான குழந்தைக்காக நானும் ஏன் மருக வேண்டும் என்பதே அவள் கேள்வியில் உள்ள நியாயம். இப்படி திரைப்படத்தின் பல இடங்களில் பெண்கள் சந்திக்கும் வலிகள் அடையாளம் காணப்படுகிறது. அதற்காகவே இயக்குனர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.

அழகான திரைப்படம். அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது. மறக்காமல் பாருங்கள். உங்கள் நேரம் பொன்னானது. அதனை இப்படியான திரைப்படங்கள் பார்ப்பதன் மூலம் மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி
இசை – ஷான் ரஹ்மான்
நடிகர்கள் – அன்னா பென் , சன்னி வெய்ன் , சித்திக் , மல்லிகா சுகுமாரன் மற்றும் பலர்.
இயக்கம் – அஜய் ஹரிஷ் – ஜூட் ஆண்டனி ஜோசப்

மூவி லவ்வர்ஸ் எதிர்பார்த்த நவரசா ஆந்தாலஜி – என்றைக்கு வெளியாகிறது என்ன கதைக் கரு ?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *