தமிழ் சினிமாவின் சிறந்த அம்மாவான சரண்யா பொன்வண்ணன் அழகான இரு மகள்களுக்கு நிஜ வாழ்விலும் அன்பான அம்மாவாக இருக்கிறார்.
பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி எனும் இரண்டு மகள்களில் மருத்துவப் படிப்பினை முடித்த முதல் மகள் ப்ரியதர்ஷினிக்கு இப்போது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
அதற்கு சான்றாக தன்னுடைய முதல் மகளின் திருமணத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தி மகிழ்ந்திருக்கிறார்கள் சரண்யாவும் கணவர் பொன்வண்ணனும்.
முதல் மகள் ப்ரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் நேற்று திருமணம் விமரிசையாக நடந்தது. இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
மாஸ்க்குகள் குறைவான திருமண விழாவாக இது இருந்தது. அல்லது புகைப்படத்திற்காக மாஸ்குகள் கழட்டப்பட்டிருக்கலாம்.
இந்தத் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்து மரக்கன்று பரிசளித்து மணமக்களை வாழ்த்தினர்.
விவாகரத்து செய்தாலும் நீங்காத நேசம் …