விவாகரத்து எனும் வார்த்தையை ரத்து செய்த ஜோடி
காதல் திருமணம் கசக்கும் போது எடுக்கும் அந்தக் கண நேர முடிவுகள் சில சமயங்களில் தவறாகப் போகலாம் என்பதற்கு ரஞ்சித் பிரியா ராமன் தம்பதியினர் ஒரு உதாரணம் எனலாம்.
திகட்டத் திகட்ட காதல் செய்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ரஞ்சித் – பிரியா ராமன் தம்பதியினர். பிரியா ராமன் ரஞ்சித்தை திருமணம் செய்யும்போது ரஞ்சித் தன்னுடைய மார்க்கெட்டை இழந்திருந்தார். பிரியா ராமன் அப்போது தான் பல படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
காதல் திருமணத்தில் முடிந்த பின்னர் பிரியா ராமன் நடிப்பதை நிறுத்தி இருந்தார். பின்னர் அவர்கள் திருமண வாழ்வில் என்ன நடந்ததோ அவர்களுக்குள் மனக்கசப்பு உண்டாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.
இவர்கள் இருவருக்கும் ஆதித்யா மற்றும் ஆகாஷ் என்கிற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 14 மற்றும் 10 வயதுடைய பிள்ளைகள் இருக்கும்போதும் 2014ம் ஆண்டு விவாகரத்து வாங்கி கொண்டனர் . அதன் பின்னர் கடந்த சில வருடங்களாக ரஞ்சித் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்ததன் பயனாக செந்தூரப் பூவே சீரியலில் இணைந்தார்.
பிரியா ராமன் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த இரு சீரியல்களும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் தம்பதி மற்றொரு முடிவை எடுத்திருக்கின்றனர்.
இந்த தம்பதியினர் 7 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
இவர்கள் ஒன்று சேர முடிவெடுத்த பின்னர் ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் தாங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை அவர்தம் வலைத்தளங்களில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து அவர்கள் மறு’மணத்தைக் கொண்டாடினார்கள்.
உங்கள் காதல் காயங்களை எப்படி மறப்பது ?
இந்த சந்தோஷ தருணங்களை செம்பருத்தி சீரியல் டீம் பிரியா ராமனுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தது. அதன் புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகில் வெகு சிலருக்கே இந்த அற்புதமான தருணங்கள் வாய்க்கும். குழந்தைகள் இனி மன நிம்மதியோடு தங்கள் குடும்ப வாழ்வைத் தொடருவார்கள். மனதில் உள்ள ஈகோவை நாம் அடையாளம் கண்டு கொண்டு அதை ஒப்புக் கொண்டாலே பல விவாகரத்துகள் ரத்தாகி விடும் .