• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

நயன்தாரா திருமணம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்

Jun 28, 2021

நயன்தாரா விக்னேஷ் சிவன் என்றாலே மிகவும் ஸ்பெஷல் தான் இல்லையா. சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு நயன்தாரா விக்னேஷ் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்பது தான். 

வெளிநாடு சென்று செல்பி போட்டுக்கொண்டிருந்த காதலையும் கொரோனா வந்து கெடுக்க தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பிசியாக இருக்கிறார் . 

ரசிகர்களுக்கும் தனக்கும் இடையேயான கேள்வி பதில் சேஷன் ஒன்றை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன் ரசிகர்களின் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையான நேர்மையான பதில்களை சுவராஸ்யமாக கொடுத்திருக்கிறார்.(Nayanthara and vignesh shivan wedding)

வழக்கமான கேள்விகளுள் பல வித்யாசமான கேள்விகளும் அதில் இருந்ததும் அதற்கு விக்னேஷ் சிவன் அழகாக பதில் அளித்திருப்பதும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. 

நீங்கள் நயன்தாராவிற்கு கொடுத்த முதல் பரிசு என்ன என்று விக்னேஷ் சிவனிடம் கேட்ட போது தங்கமே உன்னை தான் பாடல் என்று கூறியிருக்கிறார். இந்தப் பாடலை அவரே எழுதினார் .. பாடல் வரிகள் யாரைக் குறிக்கின்றன என்பதும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. 

நயன்தாரா பற்றிய ரகசியம் ஒன்றை எங்களுடன் பகிருங்கள் என்று கேட்கப்பட்ட போது யோசிக்காமல் நயன்தாராவின் அன்றாட வழக்கங்களை வெளியே சொல்லி இருக்கிறார். இரவு சாப்பிட்டு முடிந்த உடன் பாத்திரங்களை கழுவி வைப்பது நயன்தாரா தான் என்று கூறி அசத்தினார் விக்னேஷ். 

வேறு ஒருவர் ” நாங்கள் குழந்தையை எதிர்பார்க்கலாமா ” என்று வினயமாகக் கேள்வி கேட்க விக்னேஷ் சிவனோ அதற்கு அது உங்களின் துணை மற்றும் உங்களின் விருப்பத்தை பொறுத்தது என்று அவர் ஸ்டைலில் பதில் சொல்லி இருக்கிறார். Nayanthara and vignesh shivan love

இன்னொருவர் நீங்கள் நயன்தாராவை முத்தமிடுவது போல ஒரு புகைப்படம் வேண்டும் என்று கேட்க அப்போ நான் ரொம்ப பிசியா இருப்பேன். எங்களை வேற யாராவது தான் எடுக்கணும் ப்ரோ என்று யதார்த்தமாக கூறியிருக்கிறார். 

உங்கள் திருமணம் எப்போ என்கிற வழக்கமான கேள்வியும் வந்து விழா வித்யாசமான பதில் சொல்லி இருக்கிறார் விக்னேஷ் சிவன். கல்யாணம் பண்ணனும்னா ரொம்ப செலவு ஆகும் ப்ரோ காசு சேர்த்தி வச்சுக்கிட்டு இருக்கேன். கொரோனா முடிஞ்சப்புறம் பண்ணலாம் என்று பதில் கூறி இருக்கிறார். 

ஒரு ரசிகர் எல்லாரும் நயன்தாரா பற்றியே கேள்வி கேட்கறாங்களே உங்களுக்கு எப்படி பீல் ஆகும் என்று கேட்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பதில் கூறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். 

அத்தோடு அந்த கேள்வி பதில் செஷன் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணம் உங்களை பொறுத்தவரை வெறும் சம்ப்ரதாயம் தானே விக்னேஷ்.. நயன்தாராவுடனான உங்கள் காதல் உங்கள் கவிதைகளைப் போல நிலைத்திருக்க எங்கள் வாழ்த்துக்கள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *