• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

நயன்தாரா தந்தை உடல்நலம் பாதிப்பு – மனம் மாறும் நயன்தாரா ..?

Jul 11, 2021

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதல் கிளிகளாக கோலிவுட்டில் வலம் வருகின்றனர். கடந்த 2018 டிசம்பரில் இருந்தே நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண பேச்சு அடிபடுகிறது. 

 

ஆனாலும் முதலில் சம்பாத்தியம் அதன் பின்னரே தாம்பத்யம் என்கிற முடிவில் நயன்தாரா இருந்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் திருமணம் பற்றிய கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படையான ஒரு பதிலை அளித்திருந்தார். 

 

திருமணம் செய்ய அதிகம் செலவாகும் என்றும் ஆகவே தான் பணம் சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் இந்தக் கொரோனா விஷயங்கள் முடிந்த உடன் திருமணம் நடக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் நயன்தாராவின் அப்பா குரியன் கோடியாட்டுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

விமானப்படை அதிகாரியான குரியன் கோடியாட்டு மனைவி ஓமணாவுடன் கொச்சினில் வசித்து வருகிறார். சில நாட்களாகவே உடல் நலம் குன்றியிருந்த குரியன் கோடியாட்டு அவர்கள் தற்போது தீவிர உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனால் நயன்தாரா மிகுந்த மனக்கவலையை இருக்கிறார். ரசிகர்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். ஒருவேளை தகப்பன் மனநலம் மற்றும் உடல்நலம் முன்னேற தன்னுடைய திருமண ஏற்பாடுகளை பற்றி நயன்தாரா விரைவில் முடிவெடுக்கலாம் என்று தெரிய வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *