• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

மூவி லவ்வர்ஸ் எதிர்பார்த்த நவரசா ஆந்தாலஜி – என்றைக்கு வெளியாகிறது என்ன கதைக் கரு ?

Jul 9, 2021

தமிழ் சினிமாவின் பிரியத்தை பெற்ற இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரித்த நவரசா ஆந்தாலஜிக்காகத்தான் இப்போது சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

9 குணங்கள் அவற்றை ஒவ்வொன்றாக இயக்கும் திரையுலக இயக்குனர் பிரம்மன்கள் என இந்த ஆந்தாலஜி தமிழ்த் திரையுலகில் பெரும் விருந்து படைக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்ன் டீசர் மற்றும் வெளியாகும் தேதி ஆகியவற்றை வெளியிட்டு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது Netflix.

இரு ரசனைகள் ஒன்றானால் – நவரசா ஆந்தாலஜி

நவரசா ஆந்தாலஜி
நவரசா ஆந்தாலஜி

இயக்குனர் மணிரத்னம் மற்றும் படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து மனித உணர்வுகளின் ஒன்பது குணங்களை பற்றி இரு திரைப்படமாக கோர்க்கும் முயற்சியில் இறங்கினார்கள். 

மனிதனின் நவரசங்களான மகிழ்ச்சி, ஆச்சர்யம், கோபம், கருணை, அருவருப்பு, பயம், தைரியம், காதல் மற்றும் அமைதி ஆகிய குணங்களின் கீழ் இந்த ஆந்தாலஜி தொடரை 9 தலைசிறந்த இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள்.

அவர்களின் நடிகர் தேர்விலும் குறையின்றி அனைவரும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களாகவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப்போலவே ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரும் சிறந்த தேர்வாக அமைந்திருக்கின்றன. 

ட்ரஸ்ட் மூலம் பணம் திரட்டல் நவரசா ஆந்தாலஜி

நவரசா ஆந்தாலஜி
நவரசா ஆந்தாலஜி

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் யாருக்கும் சம்பளம் என்பது கிடையாது.

கொரோனா நோய் தொற்றால் உலகம் பெருமளவில் பாதித்த போது அது திரையுலக மக்களையும் விட்டு வைக்கவில்லை. நல்ல நோக்கத்துக்காக நிதி திரட்டும் பணியை பல வருடங்களாக நாங்கள் செய்து வந்தாலும் இந்த கொடூர நேரத்தில் எங்கள் உதவி என்று ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தோம். 

அதனால் சம்பளம் இல்லாமல் இப்படி ஒரு திரைப்படம் உருவாக்கி அதனை OTT தளத்தில் விற்று வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இதைப் பற்றி நாங்கள் மற்ற சக இயக்குனர்களுடன் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேசிய போது அவர்கள் மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் எங்களுக்கு கொடுத்தார்கள் என்கிறார்கள் இயக்குனர் மணிரத்னம் மற்றும் படைப்பாளர் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் ஆகிய இருவரும். 

கொரோனா கால படப்பிடிப்பு 

நவரசா ஆந்தாலஜி
நவரசா ஆந்தாலஜி

ஒன்பது விதமான கதைகள் ஒன்பது இயக்குனர்கள் என உழைப்பு பல மடங்காக இருக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மிக நன்றாக வந்திருப்பதாக இவர்கள் உறுதி செய்கிறார்கள். 

தமிழில் தலை சிறந்த படைப்பாளிகள் அனைவரும் ஒன்று கூடி இந்த நோய்த் தொற்று காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் பணியாற்றிய விதம் மிகவும் ஆச்சர்யமானது தான் இல்லையா. அதுவும் சம்பளம் இல்லாமல் மற்ற திரைத்துறை தொழிலாளர்களுக்கு இவர்கள் உதவி செய்ய நினைத்த நோக்கமும் அதைவிட மிகவும் பாராட்டத் தக்கது. 

இயக்குனர்களாக பிஜாய் நம்பியார் , கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ப்ரியதர்ஷன், அர்விந்த் சுவாமி, கௌதம் வாசுதேவ் மேனன், ரதீந்திரன் பிரசாத் , வசந்த் சாய் மற்றும் சர்ஜுன் ஆகியோர் பணிபுரிந்தனர். மனித உணர்வுகளின் நவரசத்தை இவர்கள் எப்படி தங்கள் கண்ணோட்டத்தில் காட்டுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. 

இதனை netflix வழியாக 190 நாடுகள் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 

9 தலைப்புகளும் அதன் ரசனைகளும் 

9 கதைகளைக் கொண்ட நவரசா ஆந்தாலஜியின் 9 தலைப்புக்கள் மற்றும் அதன் நடிகர்கள் தேர்வு ஆகியவை  நம்மை மேலும் ஆச்சர்யம் செய்கின்றன. 

  1. சம்மர் ஆப் 92 – யோகி பாபு , ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு – இயக்கம் ப்ரியதர்ஷன் – நகைச்சுவை

 

  1. ப்ராஜக்ட் அக்னி – அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா – இயக்கம் கார்த்திக் நரேன் – ஆச்சர்யம்

 

  1. அமைதி – சிம்ஹா, மாஸ்டர் தருண் , கௌதம் வாசுதேவ மேனன் – இயக்கம் கார்த்திக் சுப்புராஜ் – அமைதி

 

  1. எதிரி – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ் , ரேவதி – இயக்கம் பிஜாய் நம்பியார் – கருணை 

 

  1. இண்மை – சித்தார்த் பார்வதி த்ருவோது  – இயக்கம் – ரதீந்தரன் R பிரசாத் – பயம் 

 

  1. பாயாசம் – டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகினி, செல்பி கார்த்திக் – இயக்கம் வசந்த் சாய் – அருவருப்பு 

 

  1. ரௌத்திரம் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ , ரமேஷ் திலக் – இயக்கம் அர்விந்த் சுவாமி  – கோபம் 

 

  1. கிடார் கம்பியின் மேல் நின்று – சூர்யா, பிரயாகா , ரோஸ்  – இயக்கம் கௌதம் வாசுதேவ் மேனன் – காதல்

 

  1. துணிந்த பின் – அதர்வா , அஞ்சலி, கிஷோர் – இயக்கம் சர்ஜுன் – தைரியம் 

 

netflix ரசிகர்கள் இப்போதில் இருந்தே உற்சாகமாக காத்திருக்கின்றனர். நவரசங்களின் தனித்தனி ரசங்களை நம் பிரியத்திற்குரிய இயக்குனர்கள் வாயிலாக காண ஆகஸ்ட் 6 வரை காத்திருப்போம். 

பிரம்மாண்டமாக நடந்த சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *