• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்

Jul 8, 2021

செய்யக் கூடாத 12 பாவங்கள்.. தங்களின் பாவங்களை நேரில் கண்ட சாட்சி யாருமில்லை என்று தைரியமாக வாழும் பல ‘நல்லவர்கள்’ சூழ்ந்த உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

 

நம் மனசாட்சி அறிய நாம் தவறு இழைத்தால் அதுவே நம்மை கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உணர்வில் தள்ளி நம் பாவத்திற்கான பதிலை சுமக்க வைக்கும். 

 

ஆனால் இங்கே பலர் தங்கள் மனசாட்சியைக் கழற்றி வீசி எறிந்து விட்டு எந்தவிதக் குற்ற உணர்வுகளுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக மற்றவர் முன்னிலையில் தன்னை நல்லவனாகவே காட்டிக் கொள்வார்கள். 

12 பாவங்கள்

ஆனால் அவர்களுக்குத் தெரியாது அந்த மனதின் சாட்சியையும் தாண்டிய ஒரு சாட்சியாக இறைவன் சிவபெருமான் அவ்ர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று. 

 

மனசாட்சியையும் தாண்டி உங்கள் பாவத்தின் பலன்களை அறிந்தவரும் சிவபெருமான் தான் . அதற்கான தண்டனைகளை அளிப்பவரும் சிவபெருமானே தான். இருப்பினும் கண்ணீர் மல்க மனம் திருந்தி அவர் காலினைப் பற்றியவரை அவர் ஒரு நாளும் கைவிடுவதில்லை.

 

இருந்தாலும் கூட சிவபெருமானால் மன்னிக்கவே முடியாத சில பாவங்கள் இருக்கின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம். 

செய்யக் கூடாத 12 பாவங்கள்

 

1.குழந்தை மற்றும் பெண்களை உடல் வலிமையால் துன்புறுத்தும் சமயங்கள் 

 

2. முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது தானமாக கொடுத்த பொருள்களை திரும்ப வாங்குவது

 

3. மற்றவர்களின் மனைவி அல்லது கணவன் மீது ஆசை கொள்வது 

 

4. மற்றவர்களின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது 

12 பாவங்கள்

5. கர்ப்பிணிகள் மற்றும் மாத விலக்கான பெண்களிடம் வன்முறை காட்டுவது , மனம் நோக அவர்களை பேசுவது

 

6. சுயநலம் காரணமாக எளியவர் மீது பழி போடுவது , அவர்கள் கனவை அழிப்பது , வாழ்வைக் குலைப்பது 

 

7. இல்லாத உண்மைகளை மற்றவர் மனம் நோக பேசி வதந்தி உருவாக்கி அவர் வாழ்வை குலைப்பது

 

8. தொடர்ந்து தீயவழி செல்வது அல்லது எந்த ஒரு நன்மையையும் செய்யாமல் இருப்பது 

 

9. இன்னொருவரைப் பற்றி இல்லாத பொய்களை அப்பட்டமாக கூறி அவரை நிலைகுலைய வைப்பது 

 

10. உங்கள் செய்கையால் மற்றவர் வாழ்வை நாசம் செய்தால் 

 

11. மற்ற உயிரை கொல்வது , கொலைக்கு உடந்தையாக இருப்பது, இந்து தர்மம் தவிர்க்க சொன்ன உணவுகளை உண்பது 

 

12. அம்மா, அப்பா, குரு போன்ற வயதில் பெரியவர்களை மரியாதை இன்றி நடத்துவது அடித்து துன்புறுத்தல் செய்வது 

12 பாவங்கள்
12 பாவங்கள்

இப்படியான 12 விஷயங்கள் செய்தால் நாம் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அவர் நம் மீது பட்ட கோபம் சமாதானமடைய நாம் பல ஜென்மங்கள் காத்திருந்து தவம் செய்ய வேண்டி வரும். ஆகவே சிவனின் பிரியம் மட்டுமே நமக்கு போதுமானதாக இருக்குமாறு வாழ்ந்து விடுவோம் வாருங்கள். 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மகிமைகள்

உங்களுக்கு நீங்களே தாழ்வாக உணர்கிறீர்களா? குறைந்த சுய மதிப்பு – அதற்கான உளவியல் காரணங்கள்

தமிழர் கண்ட சொத்து – மஞ்சள் உங்களுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *