• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

நான் ரொம்ப பர்பெக்ட் இல்ல – கடலுக்குள் மனம் திறந்த DD

Jul 11, 2021

விஜய் டிவி என்றாலே ஒரு சில தொகுப்பாளர்கள் தான் இறுதி வரை பயணிப்பார்கள் என்பது போல 20 வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆக இருந்து வருபவர் DD என்கிற திவ்யதர்ஷினி.

 

விஜய் டிவிக்கான ரசிகர்கள் என்பது மாறி DD க்கும் அவரது நான் ஸ்டாப் பேச்சுக்கும் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. தனக்கு அருகில் உள்ளவர்கள் தொடர்ந்து பேசினால் தொணதொணப்பு எனும் நபர்கள் கூட DD பேசும்போது தங்களை மறப்பதுண்டு.

அனைவரையும் தன்னுடைய சரளமான பேச்சால் கட்டிப்போடும் DD தற்போது ஒரு அழகான கடலையும் வசீகரித்திருக்கிறார். 

 

அவருடைய இன்ஸ்ட்டா பக்கங்கள் மிக யதார்த்தமான வார்த்தைகளால் மனதை தொடும். அதே போன்று சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் DD .

அதில் அவர் கடலுக்குள் அழகாகத் தெரிகிறாரா அல்லதுஅவரால் கடல் அழகாகிறதா என்கிற மாதிரி கடலோடு கட்டிப்புரண்டு இறுகத் தழுவி கடலின் மேல் பைக் ஓட்டி பல சாகசங்கள் புரிந்ததை எடிட் செய்து காட்டியிருக்கிறார். 

 

அழகாய் இருக்கிறது DD !

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *