Cooku with Comali Ashwin…
குக் வித் கோமாளியால் இவர் புகழடைந்தாரா அல்லது அஷ்வினைப் பார்ப்பதற்காகவே குக் வித் கோமாளி பார்த்தார்களா என்பது கொஞ்சம் பதில் தெரியாத கேள்வியாகவே இருக்கும்.
முதல் எபிசோட் முதல் பிரேமில் அஷ்வினை பார்த்தவுடன் ஈர்க்கும் அந்த முகம் அஷ்வினை அவர் எதிர்பார்க்காத உயரங்களுக்கு அவரைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி முதல் எபிசோடுக்கு பின்னர் மிகவும் அதிகப்பேரால் தேடப்பட்டது யார் இந்த அஷ்வின் எனும் தகவல் தான். ( ashwin cwc)
அதைத் தொடர்ந்து அஷ்வின் நடித்த குறும்படங்கள் மற்றும் சீரியல்கள் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டது. பின்னர் குக் வித் கோமாளி எபிசோட்கள் நகர நகர ஷிவாங்கியின் க்ரஷ் சேட்டைகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. (shivaangi – ashwin)
நாம் நினைத்ததையே இந்த ஷிவாங்கி பேசுகிறாரே என்று அதனை மேலும் வைரலாக்கி மகிழ்ந்தது தமிழ் சமூகம் ! அஷ்வினும் தன்னுடைய பொறுப்பான மற்றும் பணிவான குணத்தால் மற்றவர் மனதை வயது வித்தியாசமின்றி கவர்ந்து கொண்டார். (#Ashaangi)
Cooku with Comali Ashwin – அஷ்வினுக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என்று பெரும்பாலான மக்கள் ஆசைப்பட்டதும் நடந்தது.
ஆனால் கொரோனா எல்லா ஆசைகளுக்கும் கொஞ்சம் பாஸ் பட்டன் அழுத்தி இருக்கிறது என்று சொல்லலாம். குக் வித் கோமாளி முடிந்த உடன் அஷ்வினை வேறு எங்கும் பார்க்க முடியவில்லை. ஷிவாங்கி உடன் சில இன்டெர்வியூக்கள் மற்றும் வீடியோ கால்கள் என்கிற அளவிலேயே அஷ்வினை நம்மால் பார்க்க முடிந்தது.
ஒருவேளை பிக் பாஸ் கண்டெஸ்டண்ட் ஆக அஷ்வின் செல்வாரோ என்றெல்லாம் கொஞ்சம் பயமாக வேறு இருந்தது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்காமல் அஷ்வின் தனக்கான படத் தேர்வில் இருந்திருக்கிறார் போலும்.
இருப்பினும் அஷ்வின் தனக்கு வரும் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தார்.
சமீபத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் இருந்து வெளியேறிய கதையும் மீடியா முழுக்க உலா வந்தது. ஆனால் அவர் அந்தக் கதையில் இருந்து வெளியேறியதன் முழுக்காரணம் அஷ்வினுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். எதுவாக இருந்தாலும் அஷ்வின் எடுக்கும் முடிவுகள் மிகவும் பொறுப்போடு எடுக்கப்பட்டதாகவே நாம் நம்புவோம்.
அஷ்வின் ரசிகர்கள் அனைவருக்கும் அவர்கள் எதிர்பார்த்த சந்தோஷ செய்தி வந்து விட்டது. அஷ்வின் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். என்ன சொல்லப் போகிறாய் எனும் தலைப்பில் அந்த திரைப்படம் உருவாக இருக்கிறது.
தலைப்பே ரொமான்ஸ் எனும்போது ஆர்யாவை விட ரொமான்டிக் ஆள் வேறு யார் இருக்கிறார்கள் ? எனவே ஆர்யா அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
ட்ரைடன்ட் ஆர்ட் தயாரிப்பில் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் உருவாகிறது. அதில் நாயகனாக நம் அஷ்வின் நடிக்கிறார். அஷ்வினுக்கு வெள்ளித்திரை புதிதல்ல. ஓகே கண்மணி திரைப்படம் முதல் சிறு சிறு வேடங்களில் அஷ்வின் நடித்திருக்கிறார். ஆதித்ய வர்மா வில் த்ருவின் அண்ணனாக நடித்திருப்பார். பார்த்த அனைவருக்கும் ஒரு க்ளிம்ப்ஸ் யார் இந்த அண்ணன் என்று தோன்றி மறையும் அளவிற்கு அஷ்வினின் அறிமுகம் இருந்தது.
ஆனால் என்ன சொல்லப் போகிறாய் அஷ்வினுக்கு மிகவும் முக்கியமான மைல்கல். காரணம் அஷ்வின் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அஷ்வினை இயக்குபவர் ஹரிஹரன் எனும் அறிமுக இயக்குனர். விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். புகழ் மற்றும் அஷ்வின் இணையும் இந்த படம் காமெடி கலந்த காதல் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்வின் நடிக்கும் இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகியர் என்றும் அவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இயக்குனர் ஹரிஹரன் கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் எனும் வெப் சீரிஸ் இயக்கி இருக்கிறார். மின்சார கனவு , உன்னாலே உன்னாலே போல இது ஒரு ஜாலியான காதல் படம் என்று இன்ட்ரோ செய்கிறார் இயக்குனர் ஹரிஹரன்.
வாழ்த்துக்கள் அஷ்வின்.. உங்கள் நெடுங்கால கனவு இதன் மூலம் நிறைவேறி உங்கள் கனவே உங்கள் பயணமாக மாறும் அதிசயம் நடக்கும். வெகுவிரைவில் உங்களை பெரிய திரையில் சந்திக்க விரும்புகிறோம்.