• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

இன்னமும் பிரியங்காவை எதற்காக Biggboss வீடு விட்டு வைத்திருக்கிறது ?

Dec 10, 2021

 

பிரியங்கா

இந்த அரசியல் டாஸ்க் ஆரம்பித்த நாளில் இருந்து பிரியங்காவின் பழி வாங்கும் வெறி என்பது இப்போதைக்கு மூவர் மீது மட்டுமே. ஒன்று தாமரை, இரண்டாவது, ராஜு மூன்றாவது நிரூப். இவர்கள் மீதெல்லாம் பிரியங்கா ஏன் பர்சனல் வெஞ்சேன்ஸ் வைத்திருக்கிறார் என்றால் இவர்கள் எல்லாமே பிரியங்காவை ஒரு சில இடங்களில் எதிர்த்து நின்றவர்கள் அல்லது எதிர்த்து பேசியவர்கள்.பிரியங்காவின் உண்மை முகம் தொடர்ந்து உரிந்து கழன்று விழுந்தபடிக்கே இருக்கிறது. ஆகவே அரசியல் டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் சில விஷயங்கள் பேசுவோம்.

BiggBoss Day 64 and 65

மூன்று அணிகள் பிரிந்தாயிற்று. பெயர் வைத்தாயிற்று. அதிலும் ப்ரியங்காவின் சவுண்ட் சாதாரணமாகவே ஹை டெசிபல் இதில் கட்சி பெயர் வேறு உரக்க சொல். ஆகவே பல மடங்கு டெசிபல்களில் ப்ரியங்காவின் கூக்(குரல்) இருக்கக் கூடும் என எதிர்பார்த்த படிக்கே நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது ஒரு டாஸ்க் கொடுத்து விட்டார்கள். அதற்காக தான் உண்மையிலேயே அரசியல்வாதி தான் என்பது போலத்தான் பிரியங்கா மொத்தமாக மாறிப் போயிருந்தார். பொய்கள் சொல்வது, எதிர்க்கட்சி மீது வீண் பழி சுமத்துவது, தன்னுடைய ஆங்காரத்தை சாப்பிடும் இடத்தில் கூட நிலை நாட்டுவது எனத் தொடர்ந்து ஒரு பழுத்த அரசியல்வாதியின் நடத்தை அப்படியே ப்ரியங்காவிற்கு இருந்தது.

பிரியங்காவின் பழி வாங்கும் வெறி என்பது இப்போதைக்கு மூவர் மீது மட்டுமே. ஒன்று தாமரை, இரண்டாவது, ராஜு மூன்றாவது நிரூப். இவர்கள் மீதெல்லாம் ப்ரியங்கா ஏன் பர்சனல் வெஞ்சேன்ஸ் வைத்திருக்கிறார் என்றால் இவர்கள் எல்லாமே பிரியங்காவை ஒரு சில இடங்களில் எதிர்த்து நின்றவர்கள் அல்லது எதிர்த்து பேசியவர்கள்.

ப்ரியங்காவின் ஹிட் லிஸ்டில் ராஜு முதலில் இருப்பதற்கான காரணம் என்னவென்றால் ராஜு தனக்கு எதிராக யோசிக்கிறான் தனக்கு எதிராக பேசுகிறான் தனக்கு பின்னால் வந்தவன் தன்னை மிஞ்சி நடக்கிறான் என்பது தான் ப்ரியங்கா மனதில் இருக்கும் நியாயம்.

நிரூப் இதில் அதிக தடவை பிரியங்காவை எதிர்த்து பேசியவர் என்கிற லிஸ்டில் சேர்த்தலாம். ஆனால் நட்பென்கிற பெயர் அல்லது நீ எனக்கு இன்ன வகையான உறவு என்கிற பொசசிவ்னஸ் காரணமாக அப்போதெல்லாம் ப்ரியங்கா கண்களுக்கு இது பெரிதாகத் தென்படவில்லை.

தாமரை நிச்சயமாக எது பற்றியும் புரிதல் இல்லாமல் தான் எப்படி காட்டப்படுவோம் என்கிற தெளிவு இல்லாமல் மிகச் சரியாக இன்று வரை விளையாடிக் கொண்டிருப்பவர். அடிமுட்டாளுக்கும் தன்னை அறிவாளி என்று யாரேனும் சொன்னால் கொஞ்சம் பெருமிதம் உண்டாகும். அப்படியான பாராட்டாகவே இது நாள் வரை தன்னைப் பற்றி மற்றவர்கள் கூறியதை ஏற்று கொண்டிருக்கிறார் தாமரை. உண்மையில் அவர்கள் எல்லாம் வயித்தெரிச்சலில் பேசுகிறார்கள் என்பது இந்நேரம் தாமரை உணர்ந்திருப்பார்.  #thamarai

தன்னிடம் ஒவ்வொன்றுக்கும் உதவி கேட்ட தாமரை, தனக்கு சகல நேரத்திலும் உதவியாளராக இருந்த தாமரை .. இப்போது திடீரென தன்னை விட்டு நகர்ந்து போனது ப்ரியங்காவின் மனதை பிராண்டி இருக்கிறது. நம் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் என்கிற பெயரில் தனது காலடியிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு ஜந்து திடீரென மடமடவென தன் கண்ணெதிரே வளர்ந்து நான் சுயமாகி விட்டேன் என எழுந்து நிற்கும்போது ப்ரியங்காவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆகவே தாமரையை பார்த்து பார்த்து பொருமுகிறார். அண்ணாச்சி விளையாட்டுக்கு நடுவே முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை தாமரை கண்டும் காணாமல் விடவில்லை. அவர் வயது காரணமாக அல்லது அவர் மீதுள்ள மரியாதை காரணமாக சொல்ல வேண்டியதை தெளிவாக சுருக் என்று தான் கூறினார். அண்ணாச்சி அது விளையாட்டு என்றதும் இப்படி சொல்லி என்னை ஏமாற்ற வேண்டாம் என்று தனது பக்க நியாயத்தை எடுத்துதான் வைத்தார் தாமரை. ஆனால் ப்ரியங்காவிற்கு இது போதவில்லை இன்னமும் அதிகம் தாமரை கத்தி இருக்க வேண்டும் என்கிறார். சரி இது போகட்டும்.

அதற்கு சம்பந்தமே இல்லாமல் அமீர் உள்ளே வந்தது பற்றி மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.

தங்கள் ரசிகர்களையே காதலித்து  திருமணம் செய்த பிரபலங்கள்!

டாஸ்க் தொடங்குகிறது.

அடுத்த நாள் மீண்டும் டாஸ்க் ஆரம்பிக்கிறது.

புதிய டாஸ்க் ஆக உள்ளே நடக்கும் உண்மைகளை மற்றவர் மனக் கருத்துக்களை புரிந்து பேசினால் ஒவ்வொரு மதிப்பெண் என்கிற வகையில் ஒரு டாஸ்க் தரப்படுகிறது. இதில் சஞ்சீவ் மிகச் சிறப்பாக மற்றவர்கள் மனதை புரிந்து வைத்திருந்தது வெளிச்சமாகியது.

அதில் சில கான்ட்ரவர்ஸி செயல்கள் மற்றும் கசப்பான உண்மைகளுக்கு பலர் எஸ் என்கிற பதாகை காட்டி எதிர்க்கட்சி பேதமின்றி சஞ்சீவை வெற்றியாளர் ஆக்கி அழகும் பார்த்தனர்.

அதன் பின்னர் மீண்டும் கொடி நடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த முறை 40 கொடிகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் 40 கொடிகளை 40 கொடி நிறுவும் ஸ்டாண்டில் வைத்துக் காக்க வேண்டும். இதில் யாரிடம் அதிகம் கொடிகள் இருக்கறதோ அவர் வெற்றியாளர்.

முதல் நாள் போட்டியில் ப்ரியங்கா அணி தோற்க மற்ற இரண்டு அணிகள் ஜெயித்தாயிற்று. இந்த முறை பிரியங்கா அணி ஜெயித்தாக வேண்டிய கட்டாயம். #bb5tamil

பிரியங்கா

டாஸ்க் தொடங்குகிறது.

நன்றாக உற்று கவனிக்கவும்.

டாஸ்க் தொடங்குகிறது..

சிபி அணி மற்றும் சஞ்சீவ் அணி தங்களுக்கு எதிரே உள்ள வரிசையில் ஒவ்வொரு கொடியாக மிக அமைதியாக நட்டபடி வருகின்றனர்.

நன்றாக கவனிக்கவும்.

சிபி அணி மற்றும் சஞ்சீவ் அணி தங்களுக்கு எதிரே உள்ள வரிசையில் ஒவ்வொரு கொடியாக மிக அமைதியாக நட்டபடி வருகின்றனர்

இந்த நேரத்தில் திடீரென உள்ளே புகும் பாவனி மற்றும் அபிநய் மற்ற கொடிகள் மட்டும் அதன் ஸ்டாண்ட்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு ஓடுகின்றனர். இது ப்ரியங்காவின் வியூகம் என்பது அவர் செய்கையில் தெரிகிறது.

ஆக .. முதலில் வம்படியாக அடுத்தவர் கொடிகளை தூக்கிக் கொண்டு ஓடியது யார் அணி?

ப்ரியங்கா அணி. சரி தானே ?!

அதன் பின்னர் நடந்த அநீதியை உணர்ந்த வருண் மற்றும் நிரூப் தங்களிடம் இருந்து பிடுங்கி சென்ற கொடிகளை மீட்க ஒன்றாக சென்று முயற்சிக்கின்றனர்.

அதில் நிரூப் மென்மையாக ஒரு கொடி மற்றும் சில ஸ்டாண்ட்கள் உடன் திரும்பி விடுகிறார். அதன் பின் ஒவ்வொருவராக சென்று பிடுங்க முயற்சிக்கையில் அதனைப் பிடித்திருக்கும் ப்ரியங்கா மற்றும் பாவனி கீழே விழுந்து விடுகின்றனர். பெரிதாக ஒன்றும் இல்லை. சட்டென பாலன்ஸ் தவறுகிறது அதனால் ஒரு சறுக்கல். அவ்வளவுதான். #PriyankaDeshpande

ஆனால் ப்ரியங்காவின் ஈகோ இங்கே காயப்படுகிறது. அதனால் அவர் பார்வையில் முதலில் வந்த நிரூப் பார்த்து வா வா வந்து எடுத்து பாரு என்றபடி அதிக ஆத்திரம் கோபம் முரட்டுத்தனத்துடன் அவர்களின் கொடிகளை பிடுங்க செல்கிறார்.

பாவனி சிபியை டார்கெட் செய்ய கொடிகள் கீழே விழுகின்றன.. பொறுக்கிக் கொண்டு ஓடும் பாவனி அபிநயிடம் கொடுக்க அபிநய் அதன் மீது படுத்து அதனை யாரும் எடுத்து விடாமல் பாதுகாக்கிறார்.

திருமணத்திற்காக காத்திருக்கிறீர்களா.. சில ராசிகள் பற்றி அறிந்து கொண்டு திருமணம் செய்யுங்கள்

நிரூப்பின் பலத்திற்கு முன்

இதன் பொருட்டே நிரூப் ப்ரியங்காவால் தொடர்ந்து தடுக்கப்பட்டு முரட்டுத்தனமாக அடித்து தள்ளப்படுகிறார். நிரூப்பின் பலத்திற்கு முன் ப்ரியங்கா ஒன்றுமே இல்லை எனத் தெரிந்தும் நிரூப் தன் பலத்தை பலவீனர்களிடம் காட்டாமல் அமைதியாக இருக்கிறார்.

பிரியங்கா

இதையெல்லாம் பார்க்கும் தாமரை ஆற்றாமை தாங்காமல் ஏம்பா இப்படி பண்றீங்க என்கிறார். தாமரை பார்வையில் ப்ரியங்கா, நிரூப் , அபிநய் , பாவனி இவர்களுக்குள் அடிபட்டு விட்டால் என்ன ஆகும் என்பது மட்டுமே. தெரிகிறது.

ஆனால் அபிநய் தாமரையை எப்போதும் ஒரு கிராமத்து பெண் என்கிற பார்வையில் பார்ப்பதால் உடனடியாக கோபப்பட்டு தங்களைத்தான் தாமரை குற்றம் சொல்வதாகக் கருதி சில வார்த்தைகளை விடுகிறார். #Niroop

அதன்பின் தாமரைக்கு கோபம் வந்து உனக்காகத்தான் பேசினேன் என்பது கூட உனக்கு புரியவில்லையா என்பதை கோபத்தில் வெளிப்படுத்த தெரியாமல் அபிநயிடம் ஏன் ஆள் பார்த்து கத்துகிறாய் என்று கேட்கிறார்.

ப்ரியங்கா மீண்டும் மீண்டும் தாமரையை டார்கெட் செய்கிறார். தொடர்நது கத்தியபடி இருக்கிறார். மற்றவர் சத்தங்கள் மொத்தமும் அடங்கும் வரையும் அடங்கியபின்னரும் கத்தியபடியே இருக்கிறார்.

பிக் பாஸ் குறுக்கிட்டு ஸ்கோர் கேட்கிறார்

( தலைவரே! ஸ்கோர் கேக்கற நேரமாய்யா இது!)

அதன் பின்னும் தாமரை சகஜ நிலைக்கு திரும்பாமல் இருக்க பாவனி ஏய்ய்ய்ய்ய என்று தாமரையை அதட்டுகிறார். அதன் பின்னர் கட் செய்யப்பட்டு அனைவரும் ஆங்காங்கே உணர்ச்சி கொந்தளிப்பு அடங்க அமைதியாக நின்ற படி இருக்க பிரியங்கா மீண்டும் கத்த தொடங்குகிறார்…

உரக்க சொல் அநீதியை சொல் அதை சொல் இதை சொல் எத்தனை தவறுகள் செய்தாலும் நான்தான் வின்னர் என்று சொல் என்று சகட்டு மேனிக்கு முழு சைக்கோவாக மாறி கத்தியபடி இருக்கிறார். நடுவே தாமரையைப் பார்த்து நாடகம் போடுகிறாய் என்பதை கோஷமாக வைத்து கூறியபடி இருக்கிறார். #Priyankadeshpande

பிரியங்கா

தாமரை என் தொழிலை தவறாக பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் இவர்களிடம் நாடகம் செய்து எனக்கென்ன ஆகப்போகிறது என்று புலம்பியபடி இந்த வீட்டை விட்டு வெளியிலும் போக முடியவில்லையே என்கிற வேதனையில் முகம் மூடி மீண்டும் அழத் தொடங்குகிறார். #Biggbosstamil #Biggbosstamilseason5

(தொடரும்)

 

உண்மையில் இந்த மூன்று நாள் எபிசோடில் மனித உளவியல் பாடங்கள் நிறையவே இருக்கின்றன. பிரித்து பிரித்து சொல்ல கொஞ்சம் நேரம் எடுக்கிறது. மீதம் அடுத்த கட்டுரையில்.

இதுவரைக்கும் நான் பிரியங்காவின் அணுகுமுறை பற்றி மற்றும் அவரது வாய் சாமர்த்தியம் பற்றி மட்டுமே ஹை லைட் செய்து காட்டி இருக்கிறேன்.

இந்த இரண்டு எபிசோட்களில் உள்ள எசென்ஸ் இது தான். ஒவ்வொரு மனப்பான்மையில் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை இதில் மாறுபடலாம்.

நான் நடந்தவைகளை மட்டுமே சொல்லி இருக்கிறேன். இன்னும் இதன் பின்பான உளவியல் பற்றி பேசவில்லை.

ஆகவே உங்கள் பார்வையில் இவற்றுள் நியாயம் யார் பக்கம் என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *