நெதர்லாந்தில் விளையாட்டாக John de Mol Jr. என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது தான் Big Brother. இது ஒரு Dutch reality competition television ஷோ. 1999ல் இது அந்த பிராந்தியத்தில் மட்டும் வெளியானது. அதன் பின்னர் இன்டர்நெஷனல் புகழ் பெற்று பல்வேறு நாடுகளில் இது பரந்து விரிந்தது. Bigg Boss Tamil season 5.
தமிழ் நாட்டில் பிக் பாஸா என்கிற புருவ சுருக்கல்களை எல்லாம் ஓவியா மூலம் காலி செய்தது விஜய் டிவி. அதன் பின்னர் எந்த பெண்ணை எந்த ஆணை யார் கஷ்டப்படுத்துகிறார்கள் நாம் அவர்களை காப்பாற்றுவோம் என ஒவ்வொரு சீசனையும் விறுவிறுப்பாக்கினார் மக்கள்.
லாஸ்லியாவால் ஒரு Bigg Boss சீசன் புகழடைய ஐஸ்வர்யாவின் அடாவடியால் மற்றொரு சீசன் பெயர் வாங்கியது.
கடந்த சீசனில் வெற்றியாளர் ஆன ஆரி இதற்கு முன் இருந்த போட்டியாளர்கள் மற்றும் பின் வரும் போட்டியாளர்களுக்கு ஒரு பென்ச் மார்க் வைத்து விட்டு சென்றிருக்கிறார்.
ஆரி பெற்ற அன்பைத் தாண்ட இன்னும் ஒருவர் வருவாரா என்பது பற்றி பல பக்கம் பேச்சுக்கள் எழுந்தவண்ணம் இருந்த நிலையில் வந்தே விட்டது பிக் பாஸ் சீசன் ஐந்து. இதற்கான விளம்பரம் ஷூட் செய்யப்பட்டு இந்த மாதக் கடைசியில் அல்லது செப்டம்பரில் வெளியாகும் எனத் தெரியவருகிறது. எப்போதும் போல நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் ஒருங்கிணைக்கிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் ஐந்தில் கலந்து கொள்ளக்கூடிய முக்கிய நபர்களின் பட்டியல் தற்போது வெளியாகி விட்டது.
குக் வித் கோமாளி அஷ்வின் எப்படியும் இதில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நல்லவேளையாக அஷ்வின் படங்களில் பிஸி ஆகிவிட்டார்.
அதையடுத்து குக் வித் கோமாளி பிரபலங்கள் பாபா பாஸ்கர் பெயர் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்றவர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
குக் வித் கோமாளி வின்னர் கனி மற்றும் சுனிதா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதைப் போலவே ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா, நடிகர் ஜான் விஜய் ஆகியோர் உடன் ஜி பி முத்து கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சம்யுக்தாவின் தோழியான ப்ரதாயினி இதில் கலந்து கொள்ள பேச்சு வார்த்தை நடக்கிறதா கூறப்படுகிறது. அதை போலவே நடிகை ஐஸ்வர்யா இதில் பங்கேற்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பது போல சில கண்டெஸ்டண்ட் பெயர்கள் இப்போதில் இருந்தே பார்வையாளர்களை பதறடிக்கிறது! இவர்களை எல்லாம் எப்படி பார்த்து மனம் உய்வது என்கிற கவலையில் சில நெட்டிசன்ஸ் ஆழ்ந்திருக்கின்றனர்.
சாயீஷாவை விவாகரத்து செய்துவிட்டு உன்னை மணக்கிறேன் – 70 லட்ச ரூபாய்க்காக ஈழப்பெண்ணை ஏமாற்றிய ஆர்யா ?

இருப்பினும் அதிகாரபூர்வ தகவல்களுக்காக சில நாட்கள் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.