அன்பு ஜெயிக்கும் என்கிற ஸ்லோகனை இன்னொரு தசாப்தத்திற்கு யாரும் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு தான் அன்பால் ஆனவள் என்று கூறி வந்தவர் பிக் பாஸ் அர்ச்சனா சந்தோக்.
இவர் விஜே மற்றும் ஆர்ஜே வாக பணியாற்றி வருகிறார். பல தடைகளுக்கு இடையில் பிக் பாஸ் 4ல் கலந்து கொண்ட அவர் பல விஷயங்களில் முன்னுதாரணமாக இருந்தாலும் தன்னுடைய பாகுபாடான நடவடிக்கை காரணமாக பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
உள்ளே ஆரிக்கு பல விதங்களில் மன அழுத்தம் கொடுக்க அர்ச்சனாவும் காரணமாக இருந்தார். இருப்பினும் நலமே நடந்து ஆரி வின்னராக வெளியே வந்தார். அதன் பின்னரும் கூட இன்னமும் தன்னுடைய பிக் பாஸ் எபிசோட்களை தான் பார்ப்பதில்லை என்று கூறி அதற்கொரு அழுத்தமான காரணத்தையும் ஆரி கூறி இருந்தார்.
பிக் பாஸ் பார்க்கும்போது தனக்கு பின்னால் பேசிய விஷயங்கள் பேசிய நபர்கள் பற்றியெல்லாம் தான் அறிந்து கொள்ள வேண்டி வரும் அதன் பின் அவர்களோடு முன்பு போல பழக முடியாது என்பதாலேயே ஆரி இன்று வரை தான் பிக் பாஸ் 4 பார்க்கவில்லை என்று கூறி இருந்தார்.
அர்ச்சனாவோ பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் அவற்றால் தான் பாதிக்கப்படவில்லை என்பதை தன்னுடைய அடுத்தடுத்த செயல்கள் மூலம் காட்டிக் கொண்டே வந்தார்.
அவற்றில் ஒன்று தான் எந்த விஜய் டிவி மூலம் தனக்கு பெயர் போனதோ அதே விஜய் டிவியில் மிஸ்டர் அன்று மிஸஸ் சின்னத்திரை தொகுப்பாளராக வந்தார். அந்த நிகழ்ச்சியின் சில எபிசோட்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது தான் ஒரு மருத்துவ அவசர சிகிச்சையில் இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தான் எப்போதும் இதயத்தைக் கேட்டு முடிவெடுப்பவள் என்றும் தனது மூளைக்கு அது பிடிக்காததால் சில சிரமங்களை அது தனக்கு தந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்..
வணக்கம் என் அன்பான இன்ஸ்டா மற்றும் எஃப் பி குடும்பம், நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் !! நான் எப்போதும் என் இதயத்திலிருந்து செயல்படும் ஒரு நபர்! எனவே, என் மூளை வருத்தமடைந்து, என் இதயத்தை விட சக்தி வாய்ந்தது என்பதைக் காட்ட விரும்பியது போல் தெரிகிறது !! இப்போது ஒரு சிறிய சிக்கலை உருவாக்கத் தொடங்கியுள்ளது ..
அது என் மண்டை ஓட்டின் ஒரு சின்ன பன்ச் செய்தது மற்றும் எனக்கு ஒரு சிறிய துளை உள்ளது, அதனை நிரப்ப வேண்டும்! நான் ஒரு செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவுக்கு Cerebrospinal fluid leak (பொதுவாக சி.எஸ்.எஃப் கசிவு என அழைக்கப்படுகிறது) மறு கட்டுமான அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன், இன்று மூளைக்கு அருகிலுள்ள மண்டை ஓட்டில் சில விசித்திரமான மாறுபாடுகளைக் காட்டுகிறது.
ஆகவே இதனை சரி செய்ய ஒரு அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன்.
நான் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை அறுவை சிகிச்சை செய்யப்படுவேன், நான் மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் !! இந்த எதிர்பாராத குழப்பத்தின் மத்தியில் நாங்கள் இருப்பதால், நாங்கள் தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியாமல் போகலாம்
ஆனால் ஜாரா எனது நல்வாழ்வைப் பற்றிய புதுப்பிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்வார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்! இந்த கட்டத்தையும் எதிர்த்துப் போராடி வீட்டிற்கு வருவேன் என்று நான் உறுதியளிக்கிறேன், மனம் நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கிறது !! நான் மீண்டும் பார்க்கும் வரை, இது உங்கள் அர்ச்சனா சந்தோக் என்று மிக நீண்ட பதிவினை போட்டிருக்கிறார்.
அதனுடன் சில மருத்துவமனை புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார். அவர் மகள் ஜாரா கலங்கி நிற்பது போன்ற புகைப்படங்களும் அதில் இருந்தன.
ஒரு சாதாரண மனுஷியாக தான் எதிர்கொள்ளப் போகும் அறுவை சிகிச்சையை தைரியமாக எதிர்கொள்வது பற்றி பெருமிதமாக அவர் பதிவிட்டிருக்கிறார். இது பலருக்கும் தைரியம் கொடுக்கும் என நம்புவோம்.