• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

பிக் பாஸ் ஜோடிகளில் இருந்து வனிதா வெளியேற இவர்தான் காரணமா ?

Jul 3, 2021

பிக் பாஸ் என்றால் தான் சர்ச்சை என்றில்லாமல் பிக் பாஸ் பெயர் வைத்த இந்த நிகழ்ச்சியும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

காரணம் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதா இந்த நிகழ்ச்சி பற்றி சொல்லியிருக்கும் விமர்சனங்களும் மற்றும் அதிலிருந்து அவர் வெளியேறிய முடிவும் தான்.

கடந்த மே 2021 முதல் ஸ்டார் விஜய் டிவி இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதற்கான பார்வையாளர்கள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகக் குறைவு.

இருப்பினும் தொடர்ந்து நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது இரண்டு பெண்களுக்கு இடையே மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்துள்ளது.

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள்

இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் ஒரு சிலர் ஜோடிகளாக இணைந்து நடனம் ஆடி வருகின்றனர்.

அதன்படி வனிதா- சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு ஜோடி. ஷிவானி நாராயணன் – சோம் சேகர் ஒரு ஜோடி. கேபி – ஆஜித் ஒரு ஜோடி. அறந்தாங்கி நிஷா- தாடி பாலாஜி ஒரு ஜோடி. ஷாரிக் – அனிதா சம்பத் ஒரு ஜோடி. ஜூலி – சென்ட்ராயன் ஒரு ஜோடி. சம்யுக்தா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஒரு ஜோடி. ஃபாத்திமா பாபு – மோகன் வைத்யா ஒரு ஜோடி.

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள்

அனிதாவை நாம் இதில் எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை ஆச்சர்யப்படுத்துவதாக நினைத்துக் கொண்டும் தொடர்ந்து விஜய் டிவியில் தன்னுடைய நிலையைத் தக்க வைக்கவும் இதில் கலந்து கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதில் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிகர் நகுலும் இருக்க ஈரோடு மகேஷ் மற்றும் தீனா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர்.

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள்

இந்நிலையில் திடீரென தான் அவமானப்படுத்தப்படுவதால் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக நடிகை வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் 3க்கு பிறகு எனக்கு விஜய் டிவி மற்றொரு வீடாக இருந்து வருகிறது. இருப்பினும் நான் எல்லா இடங்களிலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருவதைப் போல இங்கும் எனக்கு கொடுமைகள் நடக்கிறது.

சேனலுடன் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் வேலை செய்யும் ஸ்பாட்டில் மோசமான தாக்குதல் மற்றும் துன்புறுத்தல்களை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள்

என் வளர்ச்சி பிடிக்காத சீனியர் நடிகை தன்னை விட வயது குறைந்தவர்களிடம் நேர்மையில்லாமல் பொறாமையோடு நடந்து கொள்வது எனக்கு வருத்தமளிக்கிறது. வேலைக்கு செல்லும் இடங்களில் ஆண்களைப் போலவே சில பெண்களும் மற்ற பெண்களுக்கு துன்புறுத்தல் செய்கிறார்கள். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தீர்க்க முயல்கிறார்கள். என்று கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த இணையவாசிகள் அது ரம்யா கிருஷ்ணனாக இருக்கலாம் என்று ஊகித்து வந்தனர். இந்நிலையில் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

உங்கள் காதல் காயங்களை எப்படி மறப்பது ?

பிக் பாஸ் ஜோடிகள்
பிக் பாஸ் ஜோடிகள்

ஒரு எபிசோடில் வனிதாவின் பெர்பாமென்ஸ் பற்றி விமர்சித்த ரம்யா கிருஷ்ணன் அவருக்கு 1 மார்க் வழங்கி இருக்கிறார். இதனால் தான் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக நடிகை வனிதா கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறாராம்.

ஆனால் இதற்கு முந்தைய எபிசோட் ப்ரமோக்களில் வனிதாவை ரம்யா கிருஷ்ணன் புகழ்ந்து பேசியதும் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *