• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

BB Jodigal – காளி வேடம் போட்டு கொண்டு காதுகள் கூசும் வார்த்தை பேசிய வனிதா.. வெளியான நகுலின் மற்றொரு முகம்

Aug 1, 2021
வனிதா

BB Jodigal நிகழ்ச்சி ஆரம்பத்தில் உண்மையாகவே நன்றாக போகவில்லை. காரணம் மற்றவர் மனம் நோகாமல் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் மிகவும் சுமாரான ஆட்டத்தையும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்தது தான்.  வனிதா மூலம் இப்போது பிரபலம் ஆகி இருக்கிறது. 

 

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சி நாட்கள் செல்ல செல்ல மெல்லமாக சூடு பிடித்தது. அனிதா ஏன் இங்கே என்கிற கேள்விகள் எழுந்தது அவர் மீதான மரியாதை நிமித்தமாகவே என்றாலும் கூட வாழ்வை நகர்த்த தன் விருப்பம் போல வளைக்க யாருக்கும் உரிமை உள்ளது. அனிதா மற்றும் ஷாரிக் நடனங்கள் ஒவ்வொன்றும் புது பரிமாணங்களை காட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற ஜோடிகளும் தங்கள் கடின முயற்சியால் சில உயரங்களை தொட முனைந்தனர். இருப்பினும் அதிலும் யார் மனதிலும் ஒட்டாத ஒரு நபர் யார் என்றால் அது வனிதா மட்டுமே எனலாம். ஏற்கனவே அதிகாரம் கொண்டிருக்கும் ஒரு நபரை சிங்கம் பெண் இரும்பு மனுஷி என்கிற வார்த்தைகளால் புகழ்ந்ததன் விளைவாக தன்னுடைய தவறுகளை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். 

பிக் பாஸ் ஜோடிகளில் இருந்து வனிதா வெளியேற இவர்தான் காரணமா ?

வனிதா யார்

வனிதா

வனிதா யார் அவரது உண்மையான குணாதிசியங்கள் தான் என்ன என்பது பலரின் சந்தேகமாக இருக்கும் பட்சத்தில் சர்ச்சைக்குரிய பிபி ஜோடிகள் எபிசோட் அதற்கொரு கண்ணாடியாக விளங்குகிறது எனலாம். 

 

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே வைரல் ஆனார் Vanitha. காரணம் தன்னை சீனியர் நடிகை மதிக்கவில்லை என்றும் தன் மீது பொறாமைப்படுகிறார் என்றும் கூறிய ட்வீட் தான். அப்போதில் இருந்தே விஷயம் என்னவாக இருக்கும் என்று மக்கள் மற்றும் ஊடகங்கள் யூகிக்க ஆரம்பித்தன. 

 

தனக்கு ஒரு மார்க் தான் கொடுக்கப்பட்டதால் தான் நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால் தானே வெளியேறுவதாகவும் Vanitha அதில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என மக்கள் காத்திருந்த நிலையில் மூன்று வாரங்கள் இழுத்தடித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. 

 

பொய்யான ஒன்று

வனிதா

நிகழ்ச்சியை பார்த்த நியாயமான மனதுக்காரர்களுக்கு Vanitha யார் அவர் குணாதிசயம் என்ன என்பது கண்டிப்பாக புரிந்திருக்கும். Who is vanitha vijayakumar in tamil. அவர் அவ்வளவு பதட்டப்பட்டு போட்டிருந்த ட்வீட் எல்லாம் முற்றிலும் பொய்யான ஒன்று என்பது போல நடந்த உண்மையை ஒளிபரப்பினர் விஜய் டிவி நிறுவனத்தார். 

 

எடிட் செய்து விட்டார்கள் கட் செய்தார்கள் என்றெல்லாம் புகார் சொல்லிவிடாதபடிக்கு வனிதா நடுவர் ரம்யா க்ரிஷ்ணனுடன் வாக்குவாதம் செய்து கோபமாக போய் அமர்ந்த வரைக்கும் ஒளிபரப்பி இருந்தனர். அதன் பின்னரும் வனிதாவின் தவறான வார்த்தை மற்றும் நடத்தைகளுக்காக அவர் குழுவினரால் வெளியேற்றப்பட்டார். 

 

இதனையே தலைகீழாக மாற்றி தன்னுடைய ட்வீட்டில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக Vanitha பரிதாபத்தை சம்பாதிக்க முயற்சித்திருந்தார். 

மூவி லவ்வர்ஸ் எதிர்பார்த்த நவரசா ஆந்தாலஜி – என்றைக்கு வெளியாகிறது என்ன கதைக் கரு ?

சும்மா அமர்ந்திருந்த வனிதா

வனிதா

உண்மையில் குறிப்பிட்ட அந்த பாடலில் சுரேஷ் சக்கரவர்த்தி மிகவும் சரியான முறையில் நடன அசைவுகளை வெளிக்காட்டி இருந்தார். 4 நிமிட பாடலில் 2 நிமிடம் சும்மா அமர்ந்திருந்த Vanitha அம்மன் கண் விழிக்கும் காட்சியை ஏதோ ஆடு தலை ஆட்டும் காட்சி போல மாற்றி இருந்தார். அமர்ந்திருந்த போதும் வலது கையால் ஆசீர்வதிக்காமல் தன் இஷ்டத்திற்கு இடது கையை பயன்படுத்தி இருந்தார்.

 

அதன் பின் இறங்கி நடந்து வந்தவராவது ஆவேசமாக ஆடுவார் என்று பார்த்தால் ஒவ்வொரு அடியையையும் தன் சௌகர்யத்துக்கு எடுத்து வைத்து ஆவேசம் இல்லாமல் சும்மா கால்களை மிதித்து பாசாங்கு செய்தார். அது மட்டும் அல்லாமல் ஆட வேண்டிய அந்த இரண்டு நிமிடத்தில் கூட ஸ்டெப்ஸ் மறந்து ஆவேச காளியை காலி செய்து சிரித்து சொதப்பி கொண்டிருந்தார். 

 

இத்தனையும் செய்து முடித்து நடுவர்கள் விமர்சனம் செய்த உடன் கூப்பிடு கொரியோகிராபரை என்று அதிகாரம் செய்தார். உண்மைக்கும் இப்படியான ஒரு நபரை ஆட வைக்க அந்த கொரியோக்ராபர் என்னென்ன பாடு பட்டிருப்பார் என்பது சொல்லாமலே தெரிகிறது. 

 

மேக்கப் மட்டும் போட்டு கொண்டால் யாரும் அம்மன் ஆகி விட முடியாது. ஒருவருக்குள் காளி இறங்க வேண்டும் என்றால் அதற்கான குணாதிசியங்கள் கடவுள் நேசிக்கும் குணம் என்பது கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே அந்த உயிர்ப்பு ஒருவருக்குள் நிகழும். 

செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்

அப்செட்டான ரம்யா கிருஷ்ணன்

வனிதா

ரம்யா கிருஷ்ணன் இந்த நடனத்தை கண்டு மிகுந்த அப்செட் ஆகியிருந்தார். ஆனாலும் அதனை வெளிகாட்டிக்கொள்ளாமல் அதில் உள்ள ப்ளஸ்களை பற்றி பேச ஆரம்பித்து எனெர்ஜி இல்லை எனும் குறையை மட்டும் சொல்லி முடிப்பதற்குள் Vanitha தன்னுடைய வாக்குவாதத்தை ஆரம்பித்திருந்தார். 

 

என்னை மற்றவரோடு ஒப்பிட வேண்டாம் எனும் அர்த்தமற்ற விவாதங்கள் அங்கே சலசலப்பை ஏற்படுத்தின. அதன்பின்னர் நடுவர் ரம்யா கிருஷ்ணன் பேச பேச அங்கிருந்து நடந்து போய்க் கொண்டே இருந்ததும் Vanitha ரம்யாவை அவமதித்தது போல இருந்தது. 

 

அதற்கு பின்னும் அந்த நடனத்திற்கு 5க்கு 4 மார்க் கொடுக்க ரம்யா கிருஷ்ணன் என்ன உணர்வுகள் அற்ற பொம்மையா? 

 

ரம்யா கிருஷ்ணன் மிகுந்த தன்மையாக நடந்து கொண்டார். நகுல் மனது வலிக்காமல் டிப்ளமேடிக் பதில்களை தருபவர். அவரே ஒரு இன்டெர்வியுவில் வனிதாவின் செய்கைகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். 

 

நாற்றத்தை அதிகரிக்க வேண்டாம் – நகுல்

வனிதா

ஒரு அளவு வரை மட்டுமே காட்டப்பட்ட வனிதாவின் அட்டராசிட்டிகள் பிஹைண்ட் தி கேமராவிலும் தொடர்ந்திருப்பதாக நகுல் குறிப்பிட்டிருந்தார். காளி வேடம் போட்டிருந்த Vanitha நடுவர்களை பற்றி காது கூசும் வார்த்தைகளை பேசியதாக பின்னர் வீட்டிற்கு வந்த உடன் தான் அறிந்து கொண்டதாக நகுல் கூறி இருந்தார். 

 

மேலும் சேற்றை பற்றி அதிகம் பேசி நாற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்கிற அர்த்தத்தில் அவர் அந்த விஷயத்தை அத்தோடு முடித்துக் கொண்டார். 

 

யார் மனதும் நோகாமல் நடக்கும் நடிகர் நகுலுக்கே இப்படி வார்த்தைகள் வெளிவருகிறது என்றால் வனிதாவின் செய்கைகள் பற்றி நாம் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. 

 

இப்படி ஒரு சம்பவம் நடக்காமலே போயிருந்தாலும் கூட வனிதாவால் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்திருக்க முடியாது. மோசமான நடன காரணங்களால் வெளியேற்றப்பட்டிருப்பார். 

 

சர்ச்சைகளால் பிரபலம்

வனிதா

ஒரு நபருக்கு பக்குவம் குறைவு என்பது அவரது சிறு வயதில் நிகழ்ந்திருக்கலாம். மனப்பக்குவம் இல்லாத காலங்களில் அவர் சர்ச்சைக்குரிய நபராக சொல்லக் கூடாத பல விஷயங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இத்தனை வயதுக்கு பின்னும் இன்னமும் தான் பேசுவதும் நடப்பதும் சரிதான் என்கிற பாவனையில் தன்னையும் தன்னுடைய மூளையையும் பயிற்றுவிக்கும் செயல்கள் எல்லாம் கண்டிப்பாக ஒரு காலத்தில் மிகவும் ஆபத்தான ஒன்றில் போய்தான் முடியும். 

 

தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தால் தான் சரியானவைகளைத் தேர்ந்தெடுக்கும் அறிவு மலரும். இல்லையெனில் இப்படி சர்ச்சைகளால் பிரபலம் ஆவதையே பெருமையாக நினைத்துக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியது தான். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *