• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

அனுபமா பரமேஸ்வரன் அனுபவித்த காதல் முறிவு

Jul 13, 2021

ப்ரேமம் மூலம் அனைத்து வாலிப நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் அனுபமா பரமேஸ்வரன். சில நேரமே வந்தாலும் கூட தன்னுடைய அழகால் அனைவரையும் வசீகரித்தவர்.

அதன் பின் தனுஷ் உடன் கொடி  திரைப்படத்தில் இணைந்தார். ஏய் சுழலி எனும் பாடல் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியது 

அனுபமா
அனுபமா

இப்போது தள்ளிப்போகாதே எனும் திரைப்படத்தில் அதர்வாவின் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

ஆனால் பொதுவாக  ஏதேனும் ஒரு காதல் வதந்தி இருந்து கொண்டே இருக்கும். தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியில் இதற்கான வெளிப்படையான பதில்களை  இவர்  அளித்திருக்கிறார். anupama parameswaran opens ablout her break up in tamil.

அனுபமா

 

பிரபல கிரிக்கெட் வீரர் பும்ராவை இவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.  இருவருக்கும் திருமணம் என்கிற அளவிற்கு வதந்தி பரவவே இது வெறும் வதந்தி என்று இவர் குடும்பத்தினர் கூறினார்கள். 

இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது காதலில் விழுந்த அனுபவம் உண்டா என்று வழக்கமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். கொஞ்சமும் யோசிக்காமல் தான் ஒருவரை நீண்ட நாள்களாக உண்மையாகக் காதலித்து வந்ததாகவும் ஆனால் அது அதிக காலம் நீடிக்காமல் காதல் முறிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.  Anupama parameswaran and her love

அனுபமா

அனுபமாவைக் காதலித்து பிரிந்த அந்த அபாக்கியசாலி யாரோ எவரோ.. எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அது தவிர  மனநிம்மதிக்காக தான் தற்போது ஓவியம் வரையக் கற்று வருவதாக கூறியிருக்கிறார். மேலும் அமைதி நமக்குள் இருந்துதான் உருவாக வேண்டும் என்றும் தத்துவ மழை பொழிந்திருக்கிறார். 

அனுபமா

எது எப்படி இருப்பினும் அனுபமாவை நேசிக்க அவரது ரசிகர்கள் இருக்கும்போது அவருக்கென்ன கவலை !

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *