• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

தனக்கு நேர்ந்த அவமான கறையை சட்டப்படி துடைத்த தளபதி விஜய் – கொண்டாடும் ரசிகர்கள் !

Jul 27, 2021

 

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். 2012ல் வாங்கப்பட்ட காருக்கு ஏற்கனவே இறக்குமதி வரி செலுத்தப்பட்ட நிலையில் நுழைவு வரி எதற்கு என்கிற ரீதியில் இந்த வழக்கு பதியப்பட்டது. Actor vijay tax case

 

தீர்ப்பு

விஜய்

இதற்கான தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. வரி செலுத்திய பின்னரும் கூடுதல் வரி எதற்கு என்பதற்கான மனுவை நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் தள்ளுபடி செய்தார். அதோடு விடாமல் ரீல் ஹீரோக்கள் ரியல் ஹீரோக்கள் ஆக கூடாது. இந்த வரிப்பணம் ஏழை மக்களுக்கு போய் சேருகிறது என்றும் நீங்கள் வரி செலுத்துவது நன்கொடை அல்ல என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். 

 

மேலும் இதற்காக 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவும் அதை இரண்டு வாரத்தில் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். 

 

இது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. Vijay ரசிகர்கள் பற்றித் தனியாக சொல்ல வேண்டியதில்லை. நடிகர் விஜய்க்கு நடந்த அவமானம் என பல பிரபலங்கள் குரல் எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இந்த அபராதத்தை எதிர்த்து Actor Vijay தரப்பில் இருந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. 

 

நுழைவு வரி

 

வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு வரும் முறையில் கேட்கப்படும் நுழைவு வரி பற்றி ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தான் இப்படி ஒரு வழக்கு போட்டதாக Actor Vijay கூறியிருக்கிறார். 

 

இதில் தனக்கு போடப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும் தனி நீதிபதி கூறிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்றும் Actor Vijay கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வார்த்தைகள் தன்னை காயப்படுத்துவதாக கூறியதுடன் கூடவே மேல்முறையீடு வழக்கை தீர்ப்பு நகல் இல்லாமல் நடத்த வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். 

 

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பு நடிகர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது எனவும் இதே காரணங்களுக்காக பலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 500 வழக்குகளில் நடிகர் விஜய் மீது மட்டும் ஏன் இப்படி தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது என்பதும் யோசிக்க வேண்டி உள்ளது. எனவே அந்த கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் வழக்கு விவாதிக்கப்பட்டது.

 

மேல்முறையீடு

 

விஜய்

இதற்கான அமர்வில் நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. நடிகர் விஜய் கேட்டுக்கொண்டபடி தீர்ப்பு நகல் இல்லாமல் மேல் முறையீடு செய்ய ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு போடப்பட்ட அபாரதத் தொகையையும் தள்ளுபடி செய்தது. 

 

இதனால் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். தோல்விகளை வெல்பவர் விஜய் என்றும், போராட்டங்களை ஜெயிப்பவர் விஜய் என்றும் அனைத்து தளபதி ரசிகர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். 

 

#Mr Perfect Thalapathy Vijay

விஜய்

 

#Mr Perfect Thalapathy Vijay எனும் ஹாஷ்டேக் உடன் இந்தக் கொண்டாட்டம் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

விஜய்

 

Actor Vijay வாங்கிய ரோல்ஸ் ராய் காருக்கான நுழைவு வரி கிட்டதட்ட 81 லட்சம் ரூபாயாகும். ஏற்கனவே 15 லட்சம் ரூபாயினை கட்டியிருப்பதால் மீதம் சுமார் 66 லட்சம் ரூபாய்க்கும் மேல் கட்ட வேண்டிய நிலை வரலாம். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருமான வரித்துறை அறிவித்த பிறகு, Vijay வரி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்த விஷயங்களை உன்னிப்பாக கவனிக்கும்போது நாட்டில் பல நுழைவு வரி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் நடிகர் விஜய் மீது சர்ச்சைக்குரிய அவதூறான வார்த்தைகளை அந்த நீதிபதி ஏன் பிரயோகித்தார் என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது. 

 

வெளியானது யாஷிகா விபத்தின் சிசிடிவி காட்சிகள் – 140கிமீ வேகம் .. டாப்பை திறந்த பவானி.. கண்களை மறைத்த ஆடை..

கண்விழித்து பேசிய யாஷிகா.. விபத்துக்கான காரணம் வெளியானது..

விவாகரத்து செய்தாலும் நீங்காத நேசம் .. மீண்டும் இணைந்த ரஞ்சித் – பிரியா ராமன் தம்பதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *