நடிகர் வடிவேலு பொதுவாக தன்னுடைய குடும்பம் பற்றி வெளியில் அதிகம் பேசியதில்லை. அவருடைய நடிப்பு அத்தியாயம் சில வருடங்களாக ஒத்திப் போடப்பட்டு வந்ததால் லைம் லைட் வெளிச்சத்திற்கு வராமலேயே அவரும் இருந்தார்.
அவர் நடிக்காமலேயே அவருடைய காமெடிகள் உலகப் பிரபலமாகியது மீம் க்ரியேட்டர்கள் புண்ணியத்தில் தான். அவருடைய மீம்கள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு வடிவேலுவை நாம் அனைவரும் ரசித்திருந்தோம்.
தற்போது வடிவேலு அவர்கள் மீண்டும் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தில் நடந்த சந்தோஷ தருணங்கள் எப்படியோ வெளியாகி இருக்கின்றன.
வடிவேலு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றனர். அனேகமாக அது அவருடைய மகள் திருமணத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
திரையில் பார்க்க முடியாத நடிகர் வடிவேலுவை இப்படிக் குடும்பத்தோடு பார்ப்பதும் நமக்கு நிறைவான திருப்தியைத் தருகிறது.
விவாகரத்து செய்தாலும் நீங்காத நேசம் – மீண்டும் இணைந்த ரஞ்சித் – பிரியா ராமன் தம்பதி