• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

வெளியானது யாஷிகா விபத்தின் சிசிடிவி காட்சிகள் – 140கிமீ வேகம் .. டாப்பை திறந்த பவானி.. கண்களை மறைத்த ஆடை..

Jul 27, 2021
யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் ஏற்படுத்திய விபத்தின் பின்னணி தகவல்கள் இன்று வெளியாகி உள்ளன. 

 

நடிகை யாஷிகாவும் அவரது தோழியும் மற்ற இரு ஆண் நண்பர்களுடன் ECR வழியே வரும்போது விபத்து நடந்தது தெரிந்ததே. 

 

இந்த கொடூரமான விபத்தில் யாஷிகாவிற்கு பல இடங்களில் எலும்பு முறிந்தது. அவரது தோழி அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பவானி வள்ளி செட்டி சம்பவ இடத்திலேயே தூக்கியெறியப்பட்டு உயிர் இழந்தார். உடன் வந்த ஆண் நண்பர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. 

 

தோழி இறந்ததை அறியாத யாஷிகா

யாஷிகா

நேற்று Yashika anand கண்விழித்த நிலையில் போலீசாரிடம் தன்னுடைய வாக்கு மூலத்தை அளித்திருந்தார். ஏற்கனவே காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில் இன்று அவருக்கு இடுப்பு எலும்பில் அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக அவரது அம்மா கூறியிருக்கிறார். 

 

ரத்த அழுத்தம் பாதிக்கப்படும் என்பதால் தோழி இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறி வருகின்றனர். கண்விழித்ததும் Yashika கேட்டதும் பவானி எப்படி இருக்கிறார் என்பது தானாம். 

 

விபத்து எப்படி நடந்தது

யாஷிகா

இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. 

 

Yashika ஓட்டி வந்த கார்  Tata harrier . இந்தக் காரின் மேல் பாகத்தை திறந்து கொள்ளலாம். சம்பவத்தன்று தோழியான வள்ளி செட்டி பவானி  velicheti bavani காரின் மேற்கூரையை திறந்து உற்சாகமாக கத்தி கூச்சலிட்டபடி வந்திருக்கிறார். 

 

காருக்குள் பாடல்களை சத்தமாக வைத்துக் கேட்டபடி பவானி , yashika மற்றும் நண்பர்கள் பயணித்திருக்கின்றனர். காரின் மேற் கூரையை திறந்த பவானி பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி இருக்கிறார். 

 

அப்போது பவானியின் ஆடை கார் ஓட்டிக்கொண்டிருந்த yashika கண்களை மறைத்ததால் yashika நிலை தடுமாறி இருக்கலாம் அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. காரின் மேற்கூரையில் பாதி உடலை வெளியே நீட்டியபடி இருந்த பவானி இந்த விபத்தால் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. yashika anand car accident footages.

 

சிசிடிவி காட்சிகள்

யாஷிகா
யாஷிகா

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் கிருஷ்ணன் கரணை எனும் இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் பவானி காரின் டாப்பை திறந்து கத்தியபடி வந்தது பதிவாகி இருக்கிறது. அதே போல அங்கிருந்த வேக கட்டுப்பாட்டு கருவியில் யாஷிகாவின் கார் 122 கிமீ வேகத்தில் கடந்ததாக பதிவாகி இருக்கிறது. 

 

இதன் அடிப்படையிலேயே மேற்கண்ட ஊகங்கள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த நேரத்தில் Yashika மற்றும் பவானி இருவருமே சீட் பெல்ட் அணியவில்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. பின்னால் இருந்த நண்பர்கள் சையத் மற்றும் அமீர் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் குறைந்த காயங்களுடன் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. (careless driving by yashika)

கண்விழித்து பேசிய யாஷிகா.. விபத்துக்கான காரணம் வெளியானது.

லைசன்ஸ் ரத்து

யாஷிகா

காரினை 140கிமீ வேகத்தில் ஓட்டி வந்ததற்காக யாஷிகாவின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Yashika தற்போது அறுவை சிகிச்சையில் இருப்பதால் சிகிச்சை முடிந்த உடன் yashika வை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது. 

 

இது பற்றி yashika anand சகோதரி ஓஷீன் ஆனந்த் சமூகவலைத்தளத்தில் சகோதரிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருக்கிறார். யாஷிகா கண் விழித்து விட்டாலும் பல இடங்களில் எலும்பு முறிந்திருப்பதால் அவர் ஐ சி யு வில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். 

 

இறந்த போன பவானியின் சகோதரியும் இதே போன்றதொரு ட்வீட் போட்டிருந்தார். எங்கள் இழப்பில் இருந்து நாங்கள் மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *