ஜோதிட சாஸ்திரங்கள் என்பது கடல் போல இருந்தாலும் அதில் மழைத்துளி போல பல ரகசிய சாஸ்திரங்கள் சிப்பிக்குள் முத்தென வாழ்ந்து வருகின்றன.
அவற்றுள் ஒன்றுதான் வெற்றிலை பரிகாரம். வெற்றிலை கொண்டு பரிகாரம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் பல தீராத கஷ்டங்கள் எல்லாம் சிறுக சிறுக தீரும். பொதுவாக ஜோதிடர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வெற்றிலை பரிகாரங்களை பற்றி கூறி இருப்பார்கள். Benefits of betel leaf in tamil
எனக்கு சொன்னவர்கள் வெற்றிலையில் உளுந்து வைத்து சனி பகவானை வழிபட சொன்னார்கள். அது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசிக்கேற்ற பரிகாரங்கள் உள்ளன. இப்படி தொடர்ந்து சில வாரங்கள் செய்து வந்தாலே தீராத கர்மவினைகள் தீரும். Benefits of betel leaf in astrology
வெற்றிலை என்பது மங்களகரமான பொருள் என்பது பலருக்கும் தெரியும். இதனை தாம்பூலமாக இட்டுக் கொள்வதால் மஹாலக்ஷ்மி யோகம் அடைய முடியும். இதன் மருத்துவ குணங்கள் பற்றியும் பெரும்பாலும் எல்லாரும் அறிவார்கள். ஆனால் இதன் ஆன்மீக தன்மை குறித்து அதிகம் பேருக்குத் தெரியாது. Betel leaf spiritual benefits in tamil
வெற்றிலை கொண்டு சில தெய்வங்களுக்கு மாலை போட சொல்லுவார்கள். ஒரு சிலர் தினமும் தாம்பூலம் போட வேண்டும் என்பார்கள். வெற்றிலையை வீட்டில் வளர்த்தால் மஹாலஷ்மி அனுக்ரகம் கிடைக்கும் என்பார்கள். இப்படி பல விஷயங்கள் வெற்றிலை மூலம் செய்யப்படுகின்றன.
ராசிகளுக்கு ஏற்ப வெற்றிலை பரிகாரம்
ஒவ்வொரு ராசிகளுக்கு ஏற்ப எப்படி வெற்றிலை பரிகாரம் செய்யலாம் என்பதை பார்க்கலாம். Betel leaf remedies according to zodiac signs in tamil
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை முருகனை வணங்க வேண்டும். அப்படி வணங்கும்போது வெற்றிலையில் மாம்பழம் வைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட துன்பமும் விரைவில் நீங்கும். மனவலி நீங்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை துர்க்கை வழிபாடு அல்லது ராகு வழிபாடு செய்ய வேண்டும். ராகு வழிபாடு செய்யும்போது வெற்றிலையில் மிளகை வைத்து ராகு பகவான் பாதங்களில் வைத்து வழிபட வேண்டும். துயரங்கள் ஓடிப் போகும். மனம் அமைதி காணும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு புதன் கிழமை பரிகாரம் செய்ய உகந்த தினம். புதன் கிழமை அன்று உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும். அவர்களுக்கு வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வழிபட்டால் கஷ்டமெல்லாம் காணாமல் போகும். மனம் நிம்மதி அடையும்.
செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் காளியை வணங்க வேண்டும். இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காளிக்கு வெற்றிலை வைத்து அதில் மாதுளம்பழம் வைத்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். இதனால் வந்த கஷ்டங்கள் காணாமல் போகும். மனம் சுகம் காணும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய உகந்த நாள் வியாழக்கிழமை ஆகும். இவர்கள் வியாழக்கிழமை அன்று இஷ்டமான தெய்வத்திற்கு வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வணங்கி வர கஷ்டமெல்லாம் நீங்கும். மனம் அடங்கி போகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களும் வியாழக்கிழமை பரிகாரம் செய்ய வேண்டும். வெற்றியிலையில் மிளகு வைத்து பிரியமான தெய்வத்தை வணங்கி வந்தால் நன்மை கிட்டும். வேதனைகள் நீங்கும். மனம் நிம்மதி பெறும்.
துலாம்
வெள்ளிக்கிழமை சுக்கிரன் அதிபதியான துலா ராசிக்காரர்களுக்கு பரிகாரம் செய்ய உகந்தது. இந்த கிழமையில் வெற்றிலையில் கிராம்பு வைத்து விருப்ப தெய்வத்தை வழிபட வேண்டும். இப்படி செய்து வர தீராத கடன்கள் தீரும். மனம் நிம்மதி அடையும்.
இந்த சீசனில் உங்கள் குழந்தை பிறந்திருக்கிறதா ? அவர்கள் எதிர்காலம் இதுதான் !
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை பரிகாரம் செய்ய வேண்டும். மனதிற்கு உகந்த தெய்வத்திற்கு செவ்வாய்க்கிழமை அன்று வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து வழிபட்டு வந்தால் வேண்டிய எல்லாம் நிறைவேறும். மனம் சந்தோஷமாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய உகந்த நாள் வியாழக்கிழமை ஆகும் இந்த நாளில் வெற்றிலையில் கற்கண்டு வைத்து இஷ்ட தெய்வ வழிபாடு செய்து வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும். மனம் குதூகலிக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் குறை தீர காளி தெய்வத்தை வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். வெற்றிலையில் அச்சுவெல்லம் வைத்து காளி தெய்வத்தை வழிபட்டு வந்தால் துன்பம் தூரப் போகும். மனம் அமைதியடையும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் சனிக்கிழமை காளி வழிபாடு வெற்றிலை பரிகாரம் செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் காளிக்கு வெற்றிலையில் நெய் வைத்து வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும். மனம் சுகமாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வெற்றிலை பரிகாரம் செய்ய வேண்டும். வெற்றிலையில் சர்க்கரை வைத்து பிடித்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் தீராத நோய் தீரும். மனம் அமைதி அடையும்.
கால தேவி கோயில் – தெய்வ அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கோயில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்!