குடும்பத்தில் சண்டைகள் வருவது இயல்புதான். ஆனால் அதிகமான நேரங்கள் வெறும் வாக்குவாதங்களில் ஓடுகிறதா.. பணமின்மையால் கடன் தொல்லையால் உண்டாலும் விரக்தி வீடுகளில் தேங்குகிறதா.. வெண் கடுகு போதும்.
உங்களுக்கு ஒரு மிக எளிய பரிகார முறை இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் தினமும் ஒரு 5 நிமிடம் மெனக்கெட்டால் போதுமானது. மூன்றே மாதங்களில் உங்களை ஆழ்த்திக் கொண்டிருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி வருமானம் பெருகும்.
உங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்க நீங்கள் வெண் கடுகு வாங்கி அதனை சாம்பிராணி போட்டு வீடெங்கும் வீட்டின் ஒரு மூலை விடாமல் இந்தப் புகையை காண்பிக்கவும். மேலும் உங்கள் வீட்டின் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்கள் சமையலறை போன்ற இடங்களில் இந்த சாம்பிராணி காட்ட வேண்டும்.

ஒரு சாம்பிராணிக்கு அவ்வளவு மகிமையா என்றால் அதன் பின் ஒரு நம்பிக்கை உள்ளது.
ஒரு ராஜா சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்த போது எதிரிகள் அவர் மீது செய்வினை மற்றும் ஏவல்களை செய்தனர். இதனால் நாட்டு முடிவுகள் எடுப்பதில் பிறழ்ந்த மன்னன் தன்னுடைய குடும்பத்தின் அமைதியும் கெடுவதை உணர்ந்தான்.
கால தேவி கோயில் – தெய்வ அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கோயில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்!
ராஜகுருவிடம் இது பற்றிஆலோசித்தான். இதற்கான பரிகாரம் என்னவென்று கேட்டான். ராஜகுருவும் மன்னனுக்கு ஒரு விசேஷமான பூஜையை செய்ய சொல்லி ஆசி வழங்கினார்.
ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் பைரவருக்கு வெண் கடுகு, இலாமிச்சம் வேர், சந்தனம் மற்றும் அருகம்புல் அனைத்தையும் கொண்டு பாத பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சாம்பிராணி தூபம் தயார் செய்து அதில் வெண் கடுகை போட்டு அதை அரசன் வாழும் இடம் முழுதும் காட்ட வேண்டும் என்பதுதான் ராஜகுரு சொன்ன பரிகாரம். வெண்கடுகு திருஷ்டி
தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்க 12 ராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்
மன்னன் வெண் கடுகை ஏன் சாம்பிராணி மற்றும் பாத பூஜையில் போட வேண்டும் என்று கேட்டார். அதற்கு வெண் கடுகு மிகவும் குளிர்ச்சியானது. இமயமலையில் காவல் தொழில் புரியும் பைரவரின் தேவ கணங்கள். அதனால் தான் வெண்கடுகு இமயமலை பகுதிகளில் அதிகமாக விளைகிறது. அதன் தன்மையானது குளிர்ச்சி.
பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளையும் தன்னுள் அடக்கியவர் பைரவர் ஸ்வாமி.
அதனால்தான் தேவகணங்களில் ஒன்றாக இருக்கும் வெண்கடுகு இருக்கும் இடத்தில் தீய சக்திகள் நெருங்க முடியாது. அதனை சாம்பிராணியில் போடும் போது வெடிக்கும் சமயம் கடுகின் உள்ளே உள்ள தேவகணங்கள் அங்கிருக்கும் தீய ஆவிகளை விரட்டி அடிக்கும் என்று வெண்கடுகு பெருமைகளை விளக்கினார். வெண்கடுகு தீபம்.
அந்தப் பரிகாரத்தை செய்த மன்னனின் செய்வினை ஏவல்கள் அங்கிருந்து அகன்று வைத்தவரையே திரும்பத் தாக்கி அழித்தன.
உங்கள் குடும்ப அமைதியின்மை மற்றும் கடன் சிக்கல்கள் உங்களை வாட்டி வதைத்தால் நீங்கள் மேற்கண்ட முறையில் வெண்கடுகை பயன்படுத்தி வாருங்கள். தினமும் சாம்பிராணி காட்டுங்கள். மூன்றே மாதங்களில் உங்கள் வருமானம் நீங்கள் நினைக்காத அளவிற்கு வளரும். அதையொட்டிய குடும்ப சிக்கல்கள் மனஸ்தாபங்கள் எல்லாம் தீரும்.
செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்
நம்பிக்கை உள்ள பெண்களோ அல்லது ஆண்களோ தினமும் இதனை முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்கள் வீட்டின் அமைதி அதிகரிப்பதை உணர்வீர்கள். தொடர்ந்து சாம்பிராணி காட்டுங்கள்… இமயமலையைக் காக்கும் பைரவரின் தேவ கணங்கள் நம் வீட்டையும் காப்பார்கள்.