நெகட்டிவ் பப்ளிசிட்டி என்று தெரிந்தே பலர் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன்.. இறுதியாக அரெஸ்ட் ஆன போது செய்த அட்ராஸிட்டி பற்றியும் அவர் எவ்வளவு காலம் சிறையில் இருக்க நேரிடும் என்பது பற்றியும் பார்க்கப் போகிறோம்.
சிறந்த படிப்பாளி மற்றும் பயோடெக்னாலஜியில் முதலிடம் பெற்றவர்தான் மீரா மிதுன். ஆனாலும் தமிழ் மக்களின் போறாத காலமா அல்லது அவருக்கு சரியில்லாத நேரமா தெரியவில்லை சும்மா படிப்பு வேலை என்று இருந்த பெண்ணை மாடலிங் கொண்டு வந்து விட்டது விதி… அதன் பின் நடந்தது எல்லாமே ஊடகத்தின் முன்னிலையில் என்பதால் விளக்கவே வேண்டியதில்லை.

மீரா மிதுன்.. இந்த அழகான பெயருக்கு பின்னால் இருப்பதெல்லாம் அதற்கு நேர் எதிர் மாறானது. பிக் பாஸ் சீசன் 3 வரும் வரை யார் இந்த மீரா என்று அறியாமல் இருந்தது தமிழகம் செய்த புண்ணியமே எனலாம். ஆனால் பிக் பாஸ் 3 யில் சேரன் தன்னை தவறாகத் தொட்டதாக புகார் அளிக்க அங்கிருந்து கவனிக்கப்பட்ட நபர் ஆனார் மீரா மிதுன்.

அதன் பின் அவர் நடந்தது பேசியது எல்லாமே பிதற்றல்கள் என்றாலும் அதை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருந்ததால் தன்னை மிகப்பெரிய பிரபலமாக உள்ளூர நம்ப ஆரம்பித்து என் முகத்தை காபி அடித்தனர் என்று மிகப்பெரிய இயக்குனர் ஹீரோ என ஒருவர் விடாமல் பேசி வம்புக்கு இழுத்தார்.

நடிகர் விஜய், நடிகர் சூர்யா , ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரை இவர் வம்புக்கு இழுத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடைசியாக ஜாதி ரீதியாக பேசியதால் செமையாக மாட்டினார் மீரா மிதுன்.

இவரது ஆண் நண்பர் மற்றும் அவருடனான தனிப்பட்ட உறவை வெளிக்காட்டும் வீடியோக்கள் என முகம் சுளிக்கும் செயலை செய்து வந்த மீரா மிதுன் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை நீக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி இருந்தார்.
திருமணம் முடித்த சில மாதங்களில் 7 மாத கர்ப்பமாக இருக்கும் கயல் ஆனந்தி !
அதை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு உள்ளிட்ட பலர் மீரா மிதுன் மீது பட்டியலின மக்களை தவறாக பேசியதாக புகார் கொடுத்தனர். இதற்கு விளக்கம் அளிக்க மீரா மிதுனிற்கு சம்மன் அளிக்கப்பட்டது. நேரில் வந்து விளக்கம் அளிக்க சொல்லியும் மீரா வராமல் என்னை யாராலும் கைது செய்ய முடியாது என்று சவால் வேறு விட்டார்.
கண்கள் இதழ்களாகும் .. இதழ்களோ கள்ளாகும் இந்த சிறு குழந்தை யார் தெரிகிறதா..
சில காலமாக போலீசாரிடம் சவால் விடும் நபர்கள் எல்லோரும் போலீசாரால் ” சிறப்பான ” முறையில் கைது செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. பப்ஜி மதன் அதற்கொரு உதாரணம். அதைப்போலவே Meera Mithun மீண்டும் வாய் பேச கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை போலீசார் சுற்றி வளைத்தனர்.
Happy News !!#VijaySirFans #SuryaSirFans#TamilMakkal
Final Drama Of Her Before Arrest !!
Thappu Panna Thappika Mudiyadhu😇
End of Soopera Model !!
Police has to Find Out the Real Political Culprit Behind Her who Made Her to Talk Those!!#Justice Served #GAMEOVER pic.twitter.com/Fju1nMf4fy— JoeMichael (@RazzmatazzJoe) August 14, 2021
அதையும் விடாமல் வீடியோ எடுத்து அதனையும் யூடூப்பில் வெளியிட்டிருக்கிறார் Meera Mithun. ஒரு பொண்ணுக்கு இதுதான் பாதுகாப்பா என்று அதில் அடிக்கடி கதறுகிறார்.. போலீசார் ஹராஸ் பண்ணுகிறார்கள் என்கிறார் ஆனால் உண்மையில் போலீசார் அமைதியான முறையில் தள்ளியே நின்று இந்த கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
எவ்வளவு நேரம்தான் பார்ப்பது என்று செல்போனை கேட்க நான் கொடுக்க மாட்டேன்.. என் மீது கை வைத்தால் என்னை நானே குத்திக் கொலை (!) செய்து கொள்வேன் என்றெல்லாம் பேசியிருந்தார் மீரா.
தொடர்ந்து 5 புகார்களுக்கு மேல் பதிவாகி இருப்பதால் குண்டர் சட்டம் பாயலாம் என ஜோ மைக்கேல் கணிப்பு.

ஆனாலும் ஒரு வழியாக சட்டம் தன் கடமையை செய்து மீராமீதுனை கைது செய்து கொண்டு போயிருக்கிறது. ஆனாலும் கொஞ்ச நாட்களில் மீண்டும் வெளி வந்து பழையபடி ஆரம்பிக்கலாம்.. பப்ளிசிட்டிக்காக மற்றவர்களை எரிச்சல்படுத்தும் இப்படியான ஆட்களுக்கு எண்ட் கார்டு எப்போது என்றுதான் பல தமிழக மக்களும் ஏங்குகிறார்கள்.