நடிகர் வடிவேலு சில மறைமுகமான காரணங்கள் காரணமாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இம்சை அரசன் 24ம் புலிகேசி எனும் திரைப்படத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் மூலமாக நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு தரப்பட்டது. லைக்கா நிறுவனத்துடன் முதல் பிரதி என்கிற ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் நடிகருக்கும் படக்குழுவினருக்கு ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாக நடிகர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இந்நிலையில் அதனால் போடப்பட்ட செட் மற்றும் தயாரிப்பு செலவுகளால் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக இயக்குனர் ஷங்கர் நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.
தொற்றுநோய்களின் போது உங்கள் திருமணம் நடக்க இருக்கிறதா ? பாதுகாப்பாக திட்டமிட 7 குறிப்புகள்
#TamilFilmProducerCouncil successfully resolves all issues between #Vadivelu and #Shankar regarding #ImsaiArasan23AmPulikesi2
@MuraliRamasamy4 @tfpcouncil @shankarshanmugh pic.twitter.com/ydoL41S4ez
— Sreedhar Pillai (@sri50) August 27, 2021
ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு மறைமுக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தினரின் புதிய படத்தில் நடிக்க Actor Vadivel ஒப்புக்கொண்டிருக்கிறார். இம்சை அரசன் 24ம் புலிகேசிக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் நடிகர் வடிவேல் மீதான தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார். இதனால் நடிகர் சங்க தடை நீக்கப்பட்டுள்ளது. இனி நடிகர் வடிவேலுவை பல திரைப்படங்களில் நாம் முன்பு போலவே கண்டு களிக்க முடியும்.
கல்லூரி யில் நீங்கள் சந்திக்கும் 11 வகையான நபர்கள் – College life precautions in tamil
Actor vadivel வின் அடுத்த திரைப்படத்தை மருதமலை, படிக்காதவன் , தலைநகரம் போன்ற மாஸ் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.