• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

நடந்தே விட்ட தல – தளபதி சந்திப்பு ! இது வேற லெவல் மாஸ் ! #ThalapathyVijay

Aug 12, 2021
Dhoni Vijay

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால் தல தளபதி சந்திப்புதான். இந்த ஆசையை மனதாரக் கேட்ட பிரபஞ்சமும் அதன் விருப்பப்படி இந்த சந்திப்பை சற்று வித்யாசமாக நடத்தி இருக்கிறது. 

தளபதி விஜய்

கிரிக்கெட் தல தோனி .. மஹேந்திர சிங் தோனி .. ஆஹா இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உங்கள் முகத்தில் புன்னகை பூக்கிறது என்றால் நீங்கள் நிச்சயம் தோனி ரசிகர்தான்.

தளபதி விஜய்.. இந்தப் பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் பூ பூத்தால் நீங்கள் விஜய் ரசிகராக இருக்கலாம். 

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல.. களை கட்டும் Bigg Boss சீசன் 5..! வெளியானது போட்டியாளர் விபரங்கள்..!

இந்த நிலையில் தமிழ் ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரமான தல தோனி திடீரென தளபதி விஜய் அவர்களை சந்தித்து தமிழ் கிரிக்கெட் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறார்.  Mahendra singh Dhoni and Actor Vijay meet in tamil. #ThalapathyVijay

தளபதி விஜய்
தளபதி விஜய்

அமீரகத்தில் நடக்கக்கூடிய ஐபிஎல் போட்டியில் CSK சார்பாக தல மஹிந்திர சிங் தோனி சென்னை வந்தார். வந்தவர் மனதில் என்ன ஓடியதோ தெரியவில்லை நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து நட்பு பாராட்டி இருக்கிறார். #ThalapathyVijay

தளபதி விஜய்

தல தோனியை வரவேற்ற நடிகர் விஜய் கேரவனில் அமர வைத்து தல தோனி உடன் பேசிக் கொண்டிருந்தார். தத்தம் பாதையில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் இருவரும் சாதாரண பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே… ஆனால் அங்கே கிரிக்கெட் தல தோனி சென்றது அந்தப் படக் குழுவினருக்கே ஆனந்த அதிர்ச்சி தந்திருக்கும் எனலாம். #ThalapathyVijay

Alia bhatt மற்றும் Ranbir kapoor தான் சிறந்த காதலர்கள் – ஏன் தெரியுமா ?

தளபதி விஜய்

இவர்கள் சந்திப்பை ஒட்டி எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *