குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர்களில் குணச்சித்திர நடிகை தீபாவும் ஒருவர். அவரது வெள்ளந்தித்தனம் அவருக்கு ப்ளஸ் என்பதாலும் அப்படியான மனிதர்களை தற்போதைய நயவஞ்சக உலகில் காண்பது அரிது என்பதாலும் நடிகை தீபா மக்களால் கொண்டாடப்படுகிறார்.
குக் வித் கோமாளியில் பிரபலமான நம் ஷிவாங்கியும் இதே காரணத்தால் மக்கள் மனதை வென்ற ஒருவர்தான்.
உங்கள் மனம் கவர்ந்த நடிகைகள் இவ்வளவு படித்தவர்களா ! நடிகைகளின் கல்வி தகுதிகள் !
இந்நிலையில் ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில் நடிகை Deepa நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தீபா அக்காவை காமெடி நடிகர் தனசேகர் ஏதோ உருவ கேலி செய்து அழைத்து விட Deepa அக்காவிற்கு கோபம் வந்து பொங்கி விட்டார்.
அவரது வார்த்தைகள் உருவ கேலி செய்யும் அனைவருக்கும் ஒரு சம்மட்டி அடி எனலாம். அதிகம் படிக்காத Deepa Akka தன்னுடைய அனுபவ அறிவால் அனைவருக்கும் பாடம் புகட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்களுடனே இருக்கும் உங்களுக்கு எங்களை கஷ்டப்படுத்துவது தவறாக தெரியவில்லையா எனக் கேட்ட தீபா அக்கா மேலும் ஒருபடி மேலே போய் தாய்மை காரணமாக உடல் எடை அதிகரிப்பவர்கள் எல்லாம் உயிர் வாழவே கூடாதா என்றும் கேட்டிருக்கிறார்.
நாங்களும் ஒரு காலத்தில் ஒல்லியாக இருந்தவர்கள் தான் என்றும் பிரசவம் காரணமாக இரண்டு உயிர்களை பூமிக்கு கொடுத்தது காரணமாக உடல் எடை அதிகரித்ததாகவும் கூறி இருக்கிறார்.
கூடவே ஒவ்வொரு பிள்ளைக்கும் தன்னுடைய அம்மாதான் அழகு என்றும், கோடி ருபாய் கொடுத்தாலும் ஐஸ்வர்யா ராயோ அல்லது பேரழகி எவராக இருந்தாலும் அவர்களிடம் குழந்தைகள் செல்லாது எனவும் தன்னுடைய அம்மாதான் அவர்களுக்கு வேண்டும் என்றும் கூறி அனைவர் வாயையும் அடைந்திருக்கிறார்.
தங்கள் ரசிகர்களையே காதலித்து திருமணம் செய்த பிரபலங்கள்!
முன்னதாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி என்கிற பெயரில் காமெடியர்கள் முதல் காம்பெயர்கள் வரை அனைவரும் சக போட்டியாளர்களை ஏதாவது ஒருவகையில் உருவ கேலி செய்து கொண்டுதான் வருகின்றனர்.
Mr அண்ட் Mrs சின்னத்திரை ஷோவில் தற்போது Deepa Akka பிஸியாகவும் அதே நேரம் புத்திசாலித்தனமாகவும் விளையாடி வருகிறார். அதில் ஜெயிப்பவர்கள்தான் சரியான ஜோடி என்பது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமே. அதில் ஜெயிக்காதவர்களும் தங்களுடைய திருமண வாழ்வை வெற்றிகரமாகத் தொடர்ந்தபடியே இருப்பார்கள் என்பதுதான் நிதர்சனம்
இந்நிலையில் இன்றைக்கு வெளியாகும் எபிசோடில் ஒரு டாஸ்க்கிற்காக தனசேகர் ஏதோ பேசபோக அதற்கு தன்னுடைய நியாயமான வாதங்களால் பதில் பேசும் தீபா அக்காவின் பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைதியாக அதே நேரம் நெஞ்சில் உறைக்கும்படி தீபா அக்கா பேசிய விதத்தை அனைவரும் பாராட்டுகின்றனர். சக நடிகர்களும் தீபா அக்காவை கொண்டாடுகின்றனர். அந்த வீடியோ இதுதான்
உருவ கேலி செய்யாதீர்…
☹️ pic.twitter.com/p8QvsDoXsl— டேனியப்பா (@minimeens) August 26, 2021