• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

இந்த வருடத்தின் தலை சிறந்த ஸ்மார்ட் போன் இதுதான் – விலை என்ன தெரியுமா !

Jul 8, 2021

இந்த வருடத்திற்கான சிறந்த ஸ்மார்ட் போன் விருது சாம்சங் நிறுவனத்திற்கு சென்றிருக்கிறது. 

 

2021-ஆம் ஆண்டிற்கான உலக மொபைல் விருதுகளில் (Global Mobile Awards), சிறப்பான ஸ்மார்ட்போனுக்கான விருது Samsung Galaxy S21 மாடல் மொபைலுக்கு கிடைத்துள்ளது. 

 தலை சிறந்த ஸ்மார்ட் போன்
தலை சிறந்த ஸ்மார்ட் போன்

 Global Mobile Awards என்பது புதுமையான மொபைல்கள் உண்டாக்குவது, அதன் வன்பொருள் – மென்பொருள் மற்றும் பிற சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த விருதுகளை கொடுத்து வருகிறது.

 

ஸ்மார்ட் போன் 2021 விழா 

 தலை சிறந்த ஸ்மார்ட் போன்
தலை சிறந்த ஸ்மார்ட் போன்

இந்த வருடத்திற்கான Global Mobile Awards விருது விழாவானது கடந்த ஜூன் 30 2021ல் நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த ஜனவரி மாதம் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த Samsung Galaxy S21 கடந்த வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போன் என்று முடிவு செய்யப்பட்டது. 

 

ஸ்மார்ட் போன் போட்டி 

 தலை சிறந்த ஸ்மார்ட் போன்
தலை சிறந்த ஸ்மார்ட் போன்

இந்த ஸ்மார்ட் போனுடன் Xiaomi Mi 11 Ultra,Samsung Galaxy S20 FE 5G OnePlus 9 Pro மற்றும்  Apple iPhone 12 Pro Max ஆகியவை போட்டியிட்டன. 

 

ஆனாலும் கூட போனின் வடிவமைப்பில் உருவாக்கிய புதுமை, போனின் செயல்திறன், போன் செயல்படும் விதம் அதில் இருக்கும் சிறப்பம்சங்களின் அடிப்படை அதன் தயாரிப்பு முறை மற்றும் அதன் விலை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

 

மற்றும் கொடுக்கப்படும் பணத்திற்கான மதிப்பு  Samsung Galaxy S21ல் உள்ளதா மற்றும் அதன் உலகம் தழுவிய வணிக வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போன் சிறந்த போனாக தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக MWC வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

 

ஸ்மார்ட் போன் விலை 

 தலை சிறந்த ஸ்மார்ட் போன்
தலை சிறந்த ஸ்மார்ட் போன்

சிறந்த ஸ்மார்ட் போன் எனும் விருதினைப் பெற்ற Samsung Galaxy S21 ஸ்மார்ட் போனின் ஆரம்பவிலை 60999 மேலும் இதன் சிறப்புகள் கூடக் கூட அதன் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பொய்யர்கள் 6 வகைப்படுவார்கள் – அவர்களை எப்படி சமாளிப்பது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *