• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

சாயீஷாவை விவாகரத்து செய்துவிட்டு உன்னை மணக்கிறேன் – 70 லட்ச ரூபாய்க்காக ஈழப்பெண்ணை ஏமாற்றிய ஆர்யா ?

Jul 29, 2021

நடிகர் ஆர்யா தன்னுடைய சக நடிகைகளுடன் செய்யும் குறும்புதனத்தால்  பிளேபாய் என சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க பெயர் பெற்றவர். ஆனாலும் அதையெல்லாம் கடந்து தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்து வந்தார், இருப்பினும் Arya நாயகனாக நடித்த படங்கள் பல ஓடவில்லை. மகாமுனி மட்டுமே அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. 

 

தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஆர்யாவிற்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. ஆர்யாவுக்கு இப்போதுதான் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. மனைவி கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லாமலேயே ரகசியமாக வைத்திருந்தார் Actor Arya. 

 

ஜெர்மன் பெண்

ஆர்யா

ஆனால் அதற்கான வேறொரு காரணமாக இந்த ஜெர்மன் பெண் விவகாரமாக இருக்கலாமோ என்று கோலிவுட் யோசிக்கிறது. காரணம் ஆர்யா ஜெர்மன் நாட்டு ஈழப்பெண் ஒருவரிடம் திருமணம் செய்வதாகக் கூறி 70 லட்சம் வரை ஏமாற்றி இருக்கிறார் என்பது தான் அவர் மீது சொல்லப்படும் குற்றசாட்டு. 

 

தற்போதைய மனைவி சாயீஷாவை விவாகரத்து செய்து விட்டு ஜெர்மன் பெண் வித்ஜாவை திருமணம் செய்வதாக Arya வாக்களித்திருக்கிறார். முகநூல் மூலம் தொடர்ந்த இந்த உறவை நம்பி அந்த ஜெர்மன் பெண்ணும் 70 லட்ச ரூபாய் வரை ஆர்யாவிற்கு அனுப்பியிருப்பதாக தெரிகிறது. 

 

சில வாரங்களுக்கு முன்னர் இது பற்றிய ஸ்க்ரீன் ஷாட்கள் வெளியானது. இருப்பினும் ஆர்யா இப்போது வரை எதுவும் பேசவில்லை. 

தனக்கு நேர்ந்த அவமான கறையை சட்டப்படி துடைத்த தளபதி விஜய் – கொண்டாடும் ரசிகர்கள் !

வழக்கு

ஆர்யா

கடந்த மார்ச் மாதம் இது பற்றிய புகார் அளிக்கப்பட்டது. அதையொட்டி Arya மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு அளிக்குமாறு ஜெர்மன் பெண் Widja தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

 

ஆர்யாவின் மீது மோசடி புகார் கூறும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நிர்மல் குமார் இந்த வழக்கை விசாரித்தார். 

 

சாயீஷா வீட்டார் சொன்னபடி நடக்கவில்லை 

ஆர்யா

அந்த மனுவில் கூறியிருப்பது என்னவென்றால் தன்னிடம் 70 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்ற Arya தற்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாக வித்ஜா கூறியிருக்கிறார். மேலும் இது பற்றி கேட்ட பொழுது தன்னுடைய கடன்களை அடைப்பதாக Sayeesha வீட்டார் சொன்னதால் தான் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் இப்போது சொன்னபடி அவர்கள் நடக்கவில்லை என்பதால் இன்னும் ஆறு மாதத்தில் சாயீஷாவை விவாகரத்து செய்து விட்டு வித்ஜாவை திருமணம் செய்வதாக Arya கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 

 

மேலும் இந்த வழக்கு முடிவுக்கு வராமல் Arya நடித்த படங்கள் வெளியாகக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Arya நடித்து வெளியாகவுள்ள எனிமி , இரண்டகம் மற்றும் அரண்மனை 3 படங்கள் இவை வெளியானால் தனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகலாம் என்றும் ஜெர்மன் பெண் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். 

நயன்தாரா தந்தை உடல்நலம் பாதிப்பு – மனம் மாறும் நயன்தாரா ..?

வழக்கு தீர்வு 

ஆர்யா

சாயீஷாவை விவாகரத்து செய்து விட்டு தன்னை திருமணம் செய்வதாக Arya கூறியதாக வித்ஜா தரப்பில் வாதிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். 

 

அதனால் இந்த வழக்கானது வரும் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டது. 

விவாகரத்து செய்தாலும் நீங்காத நேசம் .. மீண்டும் இணைந்த ரஞ்சித் – பிரியா ராமன் தம்பதி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *