• Tue. May 24th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

கால தேவி கோயில் – தெய்வ அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கோயில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்!

Jul 26, 2021
கால தேவி கோயில்

ஊர் ஊராக சென்றும் கோயில் கோயிலாக தரிசித்தும் நொந்து போன மனதுடன் இன்னும் வாழ்கிறீர்களா.. உங்களுக்கு நல்ல நேரம் வந்தால் மட்டுமே இந்தக் கால தேவி கோயில் பற்றி கேள்விப்படுவீர்கள். நல்ல நேரம் வந்து விட்டால் இந்தக் கோயிலை நீங்கள் சென்று தரிசிப்பீர்கள். 

 

இந்து மதம் அளப்பரிய தத்துவங்களை மனிதனுக்கு உணர்த்துவதில் சிறப்பு வாய்ந்த மதம் எனலாம். ஒரு மனிதன் வாழ்வில் பிறந்த நிமிடம் முதல் இறக்கும் நிமிடங்கள் வரை அவனுக்கு இங்கு நிம்மதியான முறையில் வாழ நல்லதொரு வழிகாட்டியாக பல தத்துவங்களை சாஸ்திரங்களாக மாற்றி தொகுத்து கொடுத்துள்ளது இந்து மதம். 

 

மனிதனாக பிறந்த அனைவருக்கும் புரியாத ஒரு விஷயம் என்னவென்றால் என்ன செய்தாலும் ஏன் நாம் முன்னேற முடியவில்லை. சாண் அகலம் ஏறிக்கொண்டிருக்கும்போதே முழ நீளம் சறுக்குகிறதே என்ன செய்வது. இவ்வளவு புண்ணியங்களை செய்தும் யார் மனதும் நோகாமல் வாழ்ந்தும் இன்னும் ஏன் நாம் உயர்வடைய முடியவில்லை. எவ்வளவோ மோசமானவர்கள் கண்ணெதிரே கடவுள்களை கைக்குள் போட்டுக் கொண்டது போல உயர்ந்து கொண்டே போகிறார்களே என்பது மாதிரியான விஷயங்கள் மனிதனை வாட்டிக் கொண்டே இருக்கின்றன. 

 

என்னதான் கடவுளின் அருளுக்கு நாம் பாத்திரம் ஆனாலும் கூட நம் வாழ்வில் உண்டாகும் சோகங்களின் எண்ணிக்கை குறைந்ததே தவிர அவற்றை முற்றிலுமாக நிறுத்த முடியவில்லை. 

 

நேர காலம் 

கால தேவி கோயில்

இதற்கெல்லாம் காரணம் நேர காலம் என்பதுதான். நேரமும் காலமும் நன்றாக இருக்கும் பட்சத்தில் ஒருவர் எது செய்தாலும் வெற்றி மட்டுமே கிடைக்கும். அதே சமயம் நேரம் நன்றாக இல்லை என்றால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது சாக்கடையில் விழும் மழை நீரை போன்றது தான். 

 

மனிதர்களின் இந்த தவிப்பை போக்கவே தற்போது கோயில் ஒன்று உருவாகி உள்ளது. உங்களின் கெட்ட நேரங்களை போறாத காலங்களை நல்ல நேரமாக்க இங்கிருக்கும் இறைவி உதவி செய்கிறார். உலகிலேயே இருக்கும் ஒரே ஒரு கோயில் இதுதான் என்றும் கூறப்படுகிறது. 

 

கால தேவி கோயில் 

கால தேவி கோயில்
கால தேவி கோயில்

 

காலம் என்பது தான் ஞாலம் அதாவது உலகம் என்கிறது பழமொழி. காலம் எனப்படும் நேரம் இருந்தால் தான் உலகம் இயங்க முடியும். பௌர்ணமி அமாவாசை சுழற்சிகள் மற்றும் பகல் இரவு இயக்கங்களே கூட நேரத்தின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது இல்லையா?

 

அப்படியான காலத்திற்கென்று ஒரு கோயில் இருக்கிறதா என்று பார்த்தால் பல ஆயிரம் ஆண்டு பக்தி முறையில் வாழ்ந்து வந்த நம்மிடம் காலத்திற்கென்று ஒரு கோயில் இல்லவே இல்லை. 

 

உலகிலேயே முதல் முறையாக காலத்திற்கென்று ஒரு கோயில் உருவாகி இருக்கிறது. அதுவும் நம் தமிழகத்தில். ராஜபாளையம் ஊருக்கு அருகில் இந்த கோயில் உருவாகி இருக்கிறது. 

 

கால தேவி கோயில் அமைப்பு

கால தேவி கோயில்
கால தேவி கோயில்

எனக்கு எல்லாமே கெடுதலாகவே நடக்கிறது , எல்லாமே தடங்கலாக இருக்கிறது, தொட்டதெல்லாம் தோல்வி அடைகிறது , இனிமேல் வாழவே வழியில்லை போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் துக்கம் போக்க இறைவன் விரும்பினார். அப்படியானவர்களுக்கான கோயிலாக இந்தக் கோயில் அமைய அவர் ஆசிர்வதித்தார்.

 

அடுத்து என்ன செய்ய போகிறேன் என்கிற குழப்பங்களுடன் வாழும் நபர்கள் இந்தக் கோயிலை சில குறிப்பிட்ட முறைப்படி தரிசித்து வந்தால் அவர்கள் வாழ்வு வெளிச்சம் பெறும். 

 

இந்தக் கோயில் மற்ற கோயில்களை போல அமைந்திருக்காது. பொதுவாக ஆலயங்கள் காலை சூரிய உதயத்தில் ஆரம்பித்து இரவு வரை திறந்திருக்கும். ஆனால் நம் நேரத்தை மாற்றி அமைக்கும் இந்தக் கோயிலானது மாலை சூரிய அஸ்தமனம் முதல் காலை சூரிய உதயம் வரை திறந்திருக்கும். 

 

இரவு நேரங்களில் பாதுகாப்பு அதிகம் தேவை. கால ராத்திரி என்பது தான் கால தேவியின் மற்றொரு பெயர். இரவு நேரங்களில் உலகம் அமைதி அடைகிறது. இந்த நேரத்தில் தான் காலச்சக்ரத்தின் சுழற்சி அதிகமாக இருக்கிறது. எனவே தான் இங்கே இரவு நேர பூஜை நடைபெறுகிறது. 

 

இரவு நேரங்களில் பூஜை செய்தால் பக்தர்களின் கெட்ட நேரம் மாறி நல்ல நேரம் பிறக்கும் என்பது இந்தக் கோயில் அமைந்ததன் அடித்தளம் எனலாம். 

 

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றித் தரும் கோயில் கால தேவி நேரக் கோயில் எனப்படுகிறது. இங்கே மூலவராக கால தேவி அமர்ந்திருக்கிறார். 

 

இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் நேரம்தான் உலகம் என்று கோயிலின் கோபுரத்தில் எழுதப்பட்டிருக்கும். மேலே சொன்னபடி உலகமே கால விதியின் கீழ் தான் அமைந்திருக்கிறது. கெட்ட நேரம் நடக்கும்போது எவ்வளவு நல்லது செய்தாலும் அது கெடுதலாகவே முடியும். அதே போல நல்ல நேரம் வந்தால் எவ்வளவு பெரிய கெடுதலாக இருந்தாலும் அது தூளாகி விடும்.

 

கால தேவி கோயிலின் வழிபாடு முறைகள் 

கால தேவி கோயில்
கால தேவி கோயில்

இந்தக் கால தேவி கோயில் மதுரையில் உள்ள சுப்பாலாபுரம் அருகிருக்கும் எம். சிலார்பட்டி கிராமத்தில் இருக்கிறது. 

 

கோயிலுக்கு வரும் உகந்த தினங்களாக பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் குறிப்பிடப்படுகின்றன.  

 

இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் முதலில் வலமிருந்து இடமாக 11 சுற்றுக்கள் சுற்ற வேண்டும். அதன் பின் இடமிருந்து வலமாக 11 சுற்றுக்கள் வர வேண்டும். அம்மனுக்கு நெய் சார்த்துதல் செய்ய வேண்டும்.காலதேவிக்கு அபிஷேகம் செய்த நெய் கொண்டு 11 விளக்கு ஏற்றி காலதேவியை வழிபட வேண்டும். அதன் பின் காலதேவிக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் கால சக்ரத்தில் 11 நொடிகள் நீங்கள் அமர வேண்டும். பின்னர் கால தேவியை தரிசனம் செய்யவும். 

 

இதன் படி செய்வதால் உங்களுக்கு உண்டாகி இருக்கும் கெட்ட நேரங்கள் விலகும். இனி வரும் நேரம் எல்லாம் நல்ல நேரம் மட்டுமே என்பது போல மாறி விடும். இது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. அதைப்போல பல பக்தர்கள் தங்கள் வாழ்க்கை மாறிய விதத்தை பற்றி கூறி இருக்கின்றனர். 

 

பில்லி சூன்யம் மற்றும் செய்வினை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கை உடையவர்கள் மூன்று அமாவாசை அல்லது மூன்று பௌர்ணமிகளில் இங்கு வந்து காலதேவியை வழிபட்டால் நன்மையே நடக்கும். 

 

கால தேவி கோயில் வரலாறு 

கால தேவி கோயில்
கால தேவி கோயில்

இந்தக் கால தேவி கோயில்  ஆரம்பிக்கப்பட்டது தனி ஒருவரின் குடும்பதிற்காக மட்டுமே. அவர் பெயர் சின்னசாமி . அவர் போகாத கோயில் எதுவுமே இல்லை என்பது போல தமிழகக் கோயில்கள் அனைத்தையும் சுற்றி வந்தும் அவருக்கு நல்ல விஷயங்கள் நடக்கவில்லை. 

 

இந்தக் கோயிலை கட்டியவரின் அம்மா பிரபலமான மருத்துவச்சி ஆக இருந்திருக்கிறார். பிரபல மருத்துவர்கள் கைவிட்ட பின்னரும் கூட இவரின் அம்மா பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். பணம் வாங்காமல் சேவை செய்திருக்கிறார். ஆனால் அவரே பல உடல் சிரமங்களை அனுபவித்தும் இருக்கிறார். 

 

என் அம்மா நல்லது பண்ணியும் என் அப்பா நல்லது பண்ணியும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம். என்கிற கேள்வி இவரை கூறு போட்டிருக்கிறது. 

 

ஒரு மாநிலத்தில் உள்ள ஜில்லாக்களில் உள்ள  தாலுகா மற்றும் அதில் உள்ள கிராமங்கள் அங்குள்ள கோயில்கள் என ஒரு கோயில் விடாமல் அனைத்தையும் இவர் சுற்றி வந்திருக்கிறார். வைஷ்ணவி தேவி முதல் கன்னியாகுமாரி அம்மன் வரை அனைவரையும் தரிசித்திருக்கிறார். 

உங்களுக்கு அழைப்பு விடுக்கும்
உங்களுக்கு அழைப்பு விடுக்கும்

இருப்பினும் வாழ்வில் மாற்றங்கள் வரவில்லை. அப்போதுதான் நேரம் சரியாக இருக்கும்போது மட்டுமே தெய்வங்கள் அருள்கின்றன என்பதை இவர் உணர்ந்திருக்கிறார்.

 

அதன் பின் உருவானது தான் கால தேவி கோயில். இந்தக் கோயில் இருக்கும் இடத்தில் தான் காலச்சக்கரம் சுழல்வதாக கூறப்படுகிறது. 

 

காலச்சக்கரம் கொண்டு த்யானம் செய்து வந்த போது காலச்சக்கரம் இங்கு நின்றதாக இந்தக் கோயிலை உண்டாக்கியவர் கூறுகிறார். குமுளி மற்றும் தேனி ராமேஸ்வரம் கன்னியாகுமாரி போன்ற இடங்களுக்கு கால சக்ரம் பிரேக் ஆனதாகவும் இந்த இடத்தில் மட்டுமே கால சக்ரம் சுழன்று நின்றதாகவும் இவர் கூறுகிறார். 

 

இரவு நேரங்களில் பாதுகாப்பு அதிகம் தேவை. கால ராத்திரி என்பது தான் கால தேவியின் மற்றொரு பெயர். இரவு நேரங்களில் உலகம் அமைதி அடைகிறது. இந்த நேரத்தில் தான் காலச்சக்ரத்தின் சுழற்சி அதிகமாக இருக்கிறது. எனவே தான் இங்கே இரவு நேர பூஜை நடைபெறுகிறது.

 

வாழ்க்கை இந்த நொடியில் இருப்பதை போல அடுத்த நொடி இருக்குமா என்பதை உங்களால் உறுதியாக சொல்ல முடியாத போது உங்களுக்கு இறைவன் மீது நம்பிக்கை உண்டாகிறது. 

உங்கள் வாழ்க்கையில் நேரம் நன்றாக இருக்கிறதென்றால் இந்தக் கால தேவி கோயில் உங்களுக்கு அழைப்பு விடுக்கும்.

விபரங்களுக்கு

 

செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்

இந்த ஆடி மாதம் யாருக்கெல்லாம் தரும் ராஜ யோகம் ? ஆடி மாத ராசி பலன்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மகிமைகள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *