• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

கன்னியாகுமாரி அன்னை தரிசனம் – காண்பவரை எல்லாம் ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தும்

Aug 22, 2021
கன்னியாகுமாரி அன்னை

கன்னியாகுமாரி அன்னை – உலகை காக்கும் மஹா சக்தி பல்வேறு ரூபங்களில் இந்த பூமியில் தன் அன்பை சுமந்து நிற்கிறாள். அவளிடம் அருள் பெற வேண்டி ஒவ்வொரு பக்தனும் பல நூறு மைல்கள் பயணம் செய்து அவளைத் தேடித் தேடி அலைகிறான். அவள் அருளை மிக சந்தோஷமாக பெறுகிறான். 

 

அம்பிகை ஒரு யோகினியாக மிகுந்த சக்தியுடன் நித்தம் தவம் புரியும் இடம் இந்தியாவின் தென்கோடி இடமான கன்யாகுமரி. இந்த கன்னியாகுமாரி அன்னை பற்றித்தான் நாம் மேலும் பார்க்கப்போகிறோம். 

 

நேர்த்திக் கடன்

கன்னியாகுமாரி அன்னை
கன்னியாகுமாரி அன்னை

அன்னை தீமைகளை வாதம் செய்து நன்மைகளை நிலை நிறுத்துவதில் மனம் மகிழ்பவள். அம்மையால் பாரபட்சமாக நடக்கும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்னுடைய பக்தர்களும் தன்னைப்போலவே நேர்மையாக வாழ்வதைத்தான் அன்னையும் விரும்புகிறாள். அதுவே அவளுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய நேர்த்திக் கடன் எனலாம். 

 

அசுரர்கள் பலவிதமான தவங்களைப் புரிந்து மானிடர்களுக்கு பலவித இன்னல்களை புரியும் வரங்களை வாங்குவதும் அதன்பின்னர் வரம் தந்த தெய்வ ரூபமே அவர்களை வந்து வதம் செய்வதும் அல்லது அதற்கு அன்னையின் துணையை நாடுவதும் இங்கு வழக்கமே. 

கால தேவி கோயில் – தெய்வ அனுமதி இருந்தால் மட்டுமே இந்த கோயில் உங்கள் பார்வைக்கு கிடைக்கும்!

அப்படிதான் பாணாசுரன் எனும் அரக்கன் கன்னிப்பெண் ஒருத்தியால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்குகிறான். மென்மையான உடலும் மனதும் கொண்ட சாதாரண கன்னிப்பெண்ணால் தன்னை எதுவும் செய்து விட முடியாது எனும் நம்பிக்கையால் அந்த அசுரன் அந்த வரத்தை வாங்குகிறான். 

 

அன்னை அவதாரம்

கன்னியாகுமாரி அன்னை

இவன் அநியாயங்கள் தாளாமல் மக்கள் ஈசனிடம் சரண் அடைந்தனர். ஈசன் அன்னையை கன்யாகுமாரியில் அவதரிக்க செய்தார். அன்னை கன்யாகுமரியில் இருக்கும்போது ஈசன் மட்டும் கைலாயத்தில் இருக்க முடியுமா என்ன…! ஈசன் தாணுமாலயனாக சுசீந்தரத்தில் வாழ்ந்து வந்தார். 

 

ஈசனை மணக்க வேண்டி கன்னியாகுமாரி அன்னை ஊசிமுனையில் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிகிறாள்.

 

தேவியின் அழகை கண்டு மயங்கி திருமணம் செய்ய விரும்பினார். மூன்று காலங்களையும் அறிந்த நாரதர் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்யத் தீர்மானித்தார். ஆனால் அதே நேரம் அம்பிகையின் அவதார நோக்கம் நிறைவேற ஒரு நிபந்தனையை விதிக்கிறார். 

 

திருமணம் நடக்கும் இடத்திற்கு மாப்பிள்ளை சிவபெருமான் ஒரு நாழிகை முன்னதாக வர வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. 

 

ஈசனை ஏமாற்றும் சேவல்

கன்னியாகுமாரி அன்னை

தன்னுடைய திருமண நாளன்று விரும்பியவரை மணக்கும் மகிழ்ச்சியில் கன்னியாகுமாரி அன்னை நாணமுடன் காத்திருக்கிறாள். கலகத்திற்கு காத்திருக்கும் நாரதர் சேவலாக மாறி அகால வேளையில் கூவினார். அதனைக் கேட்ட இறைவன் ஈசன் முகூர்த்த நேரம் தவறி விட்டதாகத் திரும்பி விடுகிறார். 

 

ஈசன் வராத ஏமாற்றத்தில் அன்னை கோபத் கனலாய் தீப்பிழம்பாய் தகித்திருக்கும் வேளையில் பாணாசுரன் அம்பிகை மேல் காதலுடன் நெருங்கி தன்னைத் திருமணம் செய்ய வலியுறுத்துகிறான். அன்னையின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவளைக் கடத்திச் செல்லவும் முயன்றான். 

செய்யக் கூடாத 12 பாவங்கள் – இதைச் செய்தால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளாவீர்கள்

சம்ஹாரம்

கன்னியாகுமாரி அன்னை

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த அன்னை தன்னுடைய கோபத்தை எல்லாம் வாளில் இறக்கி அசுரன் பாணாசுரனை வதம் செய்தாள் அன்னை கன்யாகுமரி .

 

சம்ஹாரம் முடிந்தும் ஈஸ்வரன் தன்னை வந்து மணம் புரிவார் என அன்னை மீண்டும் ஊசி முனையில் ஒற்றைக்காலில் தவம் இருக்க ஆரம்பிக்கிறார். 

 

54 சக்தி பீடங்களில் அன்னையின் முதுகு பகுதி விழுந்த இடம் கன்யாகுமரி. அன்னை தவம் செய்த பாறையும் அன்னையின் பாதத் தடயமும் இன்னமும் கன்யாகுமரியில் இருக்கிறது. இந்த சம்ஹார காட்சி கோயிலில் கிழக்கு சுவரில் புடைப்பு சிற்பமாக இருக்கிறது. 

 

கன்னியாகுமாரி அன்னை மூக்குத்தி

 

அன்னையின் மூக்குத்தி ஒளி காரணமாக பல கப்பல்கள் கரை திட்டியதால் கிழக்கு கதவு மூடப்பட்டு இருக்கிறது. ஆயினும் அன்னை கிழக்கு நோக்கி தான் இருக்கிறாள். 

 

முக்கடலும் சங்கமிக்கும் கன்யாகுமரியில் அன்னை அதீத சக்தியுடன் அருள்கிறாள். திருமணம் ஆகாத பெண்கள் இங்கே சென்று திருமணத்திற்காக வேண்டுகின்றனர். காசி செல்ல முடியாதவர்கள் கன்யாகுமரியில் பித்ரு காரியங்கள் செய்வதால் அதே பலனை பெறுகிறார்கள். 

 

தன்னை மணக்க ஈசன் வராத காரணத்தால் அன்னை சமைத்து வைத்திருக்கின்ற பொருள்களை எல்லாம் ஏமாற்றத்தில் வீசி எறிந்ததாகவும் அதனால் கன்யாகுமரியில் மணல்பரப்பு பல நிறங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

கன்னியாகுமாரி அன்னையை வணங்குவதால் நம் மனதில் உள்ள அசுரர் எண்ணங்கள் நீங்கி அழகான வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என நம்புகிறார்கள். நீங்களும் கன்யாகுமரி சென்று அன்னையின் அருளை பெற்று வாருங்கள். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *