• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

கண்விழித்து பேசிய யாஷிகா.. விபத்துக்கான காரணம் வெளியானது..

Jul 26, 2021
யாஷிகா

 

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த விபத்தை தமிழகமே தொடர்ந்து துடிக்க துடிக்க படித்து வருகிறது. காரணம் விபத்தை ஏற்படுத்தியதும் பாதிக்கப்பட்டதும் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது தான். (Yashika anand)

 

Yashika anand தன்னுடைய சுதந்திரமான போக்குகளால் இளைஞர் மனதில் இடம் பிடித்தவர். பிக் பாஸில் கலந்து கொண்டு அதிலும் சர்ச்சையான பேசு பொருளாக மாறினார். அதன் பின்னரும் கூட விமர்சனங்களை பற்றி பதட்டமில்லாமல் தன்னுடைய போக்கில் தொடர்ந்து கொண்டிருந்தார்.

நயன்தாரா திருமணம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்

யாஷிகா ஆனந்த் 

யாஷிகா
யாஷிகா

சில போட்டோ ஷூட்கள் மூலம் யாஷிகா மேலும் மேலும் தன்னை மெருகேற்றிக் கொள்ளவே சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. அதில் சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய்  திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் இளைஞர்களால் வைரலாகியது. 

 

நடந்தேறிய பயங்கரம் 

 யாஷிகா

இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை அன்று இவர் ஓட்டி வந்த டாடா ஹாரியர் கார் (tata harrier) விபத்துக்குள்ளானது. அவ்வளவு வலிமையான காரிலேயே இப்படியான விபத்து நடந்திருக்கிறது என்றால் அப்படி ஒரு வேகத்தில் அவர்கள் வந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. (yaashika anand accident )

 

பாண்டிச்சேரியில் இருந்து Yashika மற்றும் நண்பர்கள் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். ECR ரோடில் மாமல்லபுரம் அருகில் உள்ள சூளேரிகாடு எனும் இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. 

அனுபமா பரமேஸ்வரன் அனுபவித்த காதல் முறிவு

உயிர் இழப்பு 

 யாஷிகா

அதில் உள்ளிருந்த வள்ளி செட்டி பவானி எனும் பெண் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தலையில் அடிபட்டு அவர் அங்கேயே உயிர் இழந்தார். (yashika friend valli chetti bavani died on the spot)

 

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக உதவிக்கு விரைந்தனர். அப்போதுதான் yaashika anand உடன் இருக்கிறார் என்பது தெரிந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

இவர்களுடன்  இரு ஆண்கள் பயணித்திருக்கின்றனர். அமீர் மற்றும் சையத் எனும் பெயர் கொண்ட அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே.  

 

ஆனால் காரை ஓட்டி வந்த யாஷிகாவிற்கு இடுப்பெலும்பு முறிந்திருக்கிறது. மற்றும் வலது காலும் முறிந்திருக்கிறது. (yaashika anand got injured)

 

வாக்குமூலம் 

 யாஷிகா

மூவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதல் உதவிக்கு அனுப்பிய பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். இப்படி கொடூரமான விபத்தை மாமல்லபுரம் சாலையில் நடத்திய yashika மீதும் காவல்துறை பாரபட்சம் பார்க்காமல் 3 வழக்குகள் போட்டிருக்கிறது. ( case against yashika anand)

 

இந்த நிலையில் இன்று கண்விழித்த யாஷிகாவிடம் போலீசார் விபத்துக்கான காரணத்தை கண்டறிந்தனர். தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டவில்லை என்றும் அதிவேகம்தான் விபத்திற்கு காரணம் என்றும் yashika  கூறி இருக்கிறார். (yashika gave oral statement about the accident)

 

எனவே யாஷிகாவின் மீது அதிவேகமாக வாகனம் இயக்கியது மற்றும் அதனால் உயிர் இழப்பை ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக காவல்துறையினர் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

நடிகர் வடிவேலு வின் குடும்பம் இவ்வளவு அழகா ! யாரும் பார்த்திராத புகைப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *