20 வருடம் கழித்து ஆப்கனிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். உலகத்தின் கண்கள் இப்போது ஆப்கானிஸ்தான் நோக்கி திரும்பி இருக்கிறது. அங்கு பலவித பரபரப்புகள் மற்றும் போர் பதற்றங்கள் உண்டாகி இருக்கும் இந்த வேளையில் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர்.
அதனுடன் காபூல் அதிபர் அஷ்ரப் கனி நான்கு கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் அங்கிருந்து தலைமறைவாக ஹெலிகாப்டரில் வெளியேறியதும் தெரிய வந்துள்ளது.
தாலிபான்கள் ஆட்சியில் இருந்து தப்பிப்பதற்காக அங்கு வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர், அமெரிக்க படையினர் பின்வாங்கி தங்கள் விமானங்களை அமெரிக்கா நோக்கி செலுத்தி வருகின்றனர்.
ஏராளமான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் துடித்துக்கொண்டிருக்கையில், ஒரு புகைப்படம் காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சுமார் 640 ஆப்கானிஸ்தான் மக்களுடன் ஒரு பெரிய இராணுவ சரக்கு விமானத்தைக் காட்டுகிறது.
அமெரிக்க விமானப்படை சி -17 குளோப்மாஸ்டர் III விமானம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இயக்கப்படுகிறது
Video: People run on tarmac of Kabul international airport as a US military aircraft attempts to take off. pic.twitter.com/9qA36HS0WQ
— TOLOnews (@TOLOnews) August 16, 2021
இதனால் கிடைத்த அமெரிக்க ராணுவ விமானங்களில் ஆப்கனிஸ்தான் மக்களில் பலர் ஏறி தங்கள் உயிரையும் வாழ்வையும் காத்துக் கொள்ள முயற்சித்தனர். அந்த சமயங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேற்று இணையம் முழுதும் வைரலாகி இருக்கிறது.
ஓடும் விமானத்தில் ஏற முயலும் பயணிகள் மற்றும் பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்த 3 பயணிகள் என அந்தப் புகைப்படங்களும் வீடியோக்களும் சரித்திர நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது.
தற்போது அந்த ராணுவ சரக்கு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் பலர் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த அந்த காட்சி இன்று உண்மையான சம்பவமாகக் காணும்போது பார்க்கும் மனம் பதைக்கிறது.
இதுவரை 150 முதல் 200 பேரை ஏற்றி சென்ற அந்த சரக்கு விமானம் நேற்று 600 நபர்களை ஏற்றியபடி பறந்தது. அமெரிக்க ராணுவ சரக்கு விமானமான C-17 Globemaster III அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு அவர்கள் எங்கு இறக்கி விடப்பட்டார்கள் என்கிற தகவலையும் தெரிவித்திருக்கிறது.

மக்கள் பீதியடைந்ததை அடுத்து அவர்களை ஏற்றி அழைத்து சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு விமானத்தில் கால் நீட்டக் கூட வழியின்றி 600 பயணிகளும் உடல் குறுக்கி அமர்ந்திருந்த கோலம் பார்ப்பவர்களை வருதத்தமடைய வைத்தது.
மேற்கண்ட விமானத்தில் பயணித்த ஆப்கனிஸ்தான் பெண்கள் குழந்தைகள் உள்பட அனைவரும் கத்தாரில் பத்திரமாக இறக்கி விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This footage from Kabul airport — Afghans desperately trying to board a C-17 airlifter from the Gulf. #Afghanistan pic.twitter.com/c8s5ZsB3cs
— Alex Macheras (@AlexInAir) August 15, 2021