• Wed. May 25th, 2022

369-View

பிரபஞ்ச துகள்

இந்த ஆடி மாதம் யாருக்கெல்லாம் தரும் ராஜ யோகம் ? ஆடி மாத ராசி பலன்

Jul 18, 2021
ஆடி மாத ராசி பலன்

ஆடி மாத ராசி பலன் – ஜூலை 17 அன்று தொடங்கியது ஆடி மாதம். சும்மாவே கொரோனாவால் அனைவரின் வாழ்க்கையும் ஆட்டம் கண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆடி மாதம் வேறு வந்துவிட்டதே.. இனி என்னென்ன ஆட்டு ஆட்டப் போகிறதோ என்று பெரும்பான்மை மக்கள் பயத்தில் இருக்கின்றனர். #zodiacsigns

இருப்பினும் ஆடி மாதம் தட்சிணாயன புண்ணிய காலம். இந்த காலத்தில் சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கி பயணிக்கிறார். இது பலருக்கும் பலவித யோகங்களையும் வாழ்க்கை மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும் மாதமாக இருக்கும். Astrology predictions in tamil

இந்த மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணிக்கிறார். இந்த ராசியில் செவ்வாயில் சூரியன், சிம்ம ராசியுள்  சுக்கிரன், விருச்சிகத்துள் கேது, மகர ராசிக்குள் சனி, கும்ப ராசிக்குள் குரு, ரிஷபத்துள் ராகு, மிதுன ராசியுள்  புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன. Rasi palan in tamil.

ஆகவே ஆடி மாதமானாலும் யோகம் பெரும் ராசிகள் எப்போதும்போலவே இருக்கின்றன. அவற்றுள் உங்கள் ராசி இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். Astrology predictions for Aadi month in tamil

மேஷம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். பண வரவு அதிகரிக்கும். மன தைரியம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாகும். தொழில் மற்றும் பணியிடங்களில் மரியாதை சேரும். ரத்த சொந்தங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் யோகமான மாதம். வேண்டும் பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பு திறன் பளிச்சிடும். புதிய வாகன யோகம் இருக்கிறது. மகப்பேறு மூலம் மகிழ்வான செய்தி வரும்.  ஆனாலும் அம்மாவின் ஆரோக்கியம் குறையலாம். காதலில் சிக்கல்கள் வரலாம். Astrology predictions in tamil

செவ்வாய்க்கிழமை அங்காரக வழிபாடு நன்மை செய்யும். விநாயகர் உங்கள் இஷ்ட தெய்வம் என்பதால் அவரை வணங்க வேண்டும். அருகம்புல் சார்த்துவது கூடுதல் மேன்மை தரும். 

ரிஷபம்  ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

தைர்ய ஸ்தானம் உங்களுக்கு இப்போது பலமாக இருக்கிறது. எனவே நீங்கள் தைரியத்துடன் இருப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு, நல்ல செய்தி ஆகியவை உங்களைத் தேடி வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். 

மனநிம்மதி மற்றும் மகிழ்ச்சி இரண்டும் கிடைக்கும். புதிய அசையும் அசையா சொத்துக்களை வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். குழந்தை வேண்டி தவம் இருந்தவர்களுக்கு அது கைகூடி வரும் யோக காலமாக இது இருக்கும். தேவையான பொருள்களை பெண்கள் வாங்கி மகிழலாம். 

பங்குச்சந்தை பலன் தரும். வேலையை விட வேண்டாம். இது வேலை மாறும் மாதம் அல்ல. அலுவலக சிக்கல்களில் பொறுமை காக்கவும். சகோதர நன்மைகள் கிடைக்கும். குலதெய்வ ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும். 

மிதுனம் ராசி

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

உங்கள் மனம் விரும்பிய எல்லாம் இந்த காலத்தில் நிறைவேறும். உறவினர்கள் உதவி செய்வார்கள் அன்னை உடல்நலம் நன்றாகும். உங்கள் நல்ல முயற்சி மற்றும் நோக்கங்களுக்கு நன்மை நடக்கும். பணி சிக்கல்கள் நீங்கும். புது வேலைவாய்ப்பு பதவி உயர்வு வருமான உயர்வு ஆகியவை நடக்கும். 

அரசு வேலை வங்கிக்கடன் ஆகியவை விரைவாக கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் பேணப்பட வேண்டும். அதே நேரம் மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். பங்குசந்தை லாபம் தரும். 

கடகம் ராசி 

ராகு பகவான் உங்களுக்கு லாபங்கள் தருவதால் இந்த மாதம் உங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகம் இருக்கும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை நாடி வரும். 

தாம்பத்யம் பலமாகும். காதல் சிக்கல்கள் எல்லாம் நீங்கி நல்ல செய்தி உருவாகும். பெரியவர்களின் ஆசியும் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். உடல்நலம் மட்டும் பாதிக்கப்படலாம். கால் பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை.  அமாவாசை தர்ப்பணம் முக்கியமாக செய்தாக வேண்டும். 

சிம்மம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்கள் அம்மன் அருளால் தடைகளை வெல்வார்கள். விரய ஸ்தானம் என்பதால் செலவுகளை குறைப்பது பாதுகாப்பு தரும். தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்காமல் ஒதுங்குவது நன்மை விளைவிக்கும். 

பணியில் நல்ல கவனம் வேண்டும். இல்லையெனில் பிரச்னைகள் வரலாம். கோபங்களை தள்ளிப்போடுதல் நல்லது. முன்னோர் சொத்து கிடைக்கலாம். பணவரவு இருக்கும். 

முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் தீர யோசித்து ஆலோசனை செய்து அதன் பின் எடுக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது. பங்கு சந்தை வேண்டாம். பணத்தை சேமிக்க முயற்சிக்கவும். குலதெய்வம் கூட வர அவர்களுக்கு பூஜை செய்யவும். Astrology predictions in tamil

கன்னி ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

இந்த ஆடி மாதம் மிக பொறுமையுடன் காலம் நகர்த்த வேண்டி வரலாம். விரய ஸ்தானம் என்பதால் பணவரவு செலவுகளில் மிகுந்த கவனம் வேண்டும். நிதானம் மற்றும் பொறுமையை எல்லா விஷயத்திலும் கடைபிடிக்கவும். 

குரு பகவான் வக்கிரம் அடைவதால் வார்த்தைகளில் கவனம் வேண்டும். பணவரவு இருந்தாலும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். பணியில் பணியிடத்தில் மாற்றம் செய்வது நல்லது. உயர் அதிகாரிக்கு மதிப்பு தருவதே நன்மை தரும். 

எதிர்பாலின ஈர்ப்பு உண்டாகும். அதனால் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். கவனமாக இருப்பதும் தவிர்ப்பதும் நல்லது. சமைக்கும்போது காயங்கள் உண்டாகும். கவனம். அமாவாசை தர்ப்பணம் நன்மை தரும்.

துலாம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

சூரியன் பத்தாம் வீட்டில் பயணிப்பதால் உங்களுக்கு பொற்காலமாக இந்த ஆடி மாதம் இருக்கும். செய்கின்ற தொழில் விருத்தி அடையும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 

குடும்ப சந்தோஷம் கூடும். சொத்து பணம் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மட்டுப்படும். பல வருடம் காத்திருந்த நல்ல செய்தி நல்ல நேரம் உங்களைத் தேடி வருகிறது. வீடுகளில் விசேஷங்களை ஏற்படுத்தும். புது வீடு வாங்க யோகம் இருக்கிறது. 

புதிய பணவரவுகள் உண்டாகும். நண்பர்கள் உதவுவார்கள், கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சுப காரியம் சந்தோஷம் மனமகிழ்ச்சி என எல்லாமே இந்த மாதத்தில் உங்களுக்கு உரித்தாகும். ஆடி அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு உங்கள் நன்மைகளை இரட்டிப்பாக்கும்.

விருச்சிகம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

சூரியனின் தட்சிணாயன பயணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொத்துக்களை மீட்டுத் தரும். முன்னோர் ஆசி கிடைப்பதால் புதிய வேலை பணவரவு போன்றவை உண்டாகும். தெய்வ அருள் கூடி வருவதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். Rasi palan in tamil.

இந்த மாதம் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் உண்டாகலாம். விருச்சிக ராசி மக்களுக்கு முன்னேற்றம் நிறைந்த மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளை பகைக்காமல் நடக்க வேண்டும். 

உடல் ஆரோக்கியம் கவனம் வேண்டும். சகோதர உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுகமாக நடக்கும். காதல் கனவுகள் ஈடேறும். ஆடி மாத அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். 

தனுசு ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

சூரியனின் இந்த பயணம் தனுசு ராசிக்காரர்களுக்கு சில எச்சரிக்கைகளை வழங்குகிறது. அறிவார்ந்த முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும்.

வாகன பயணங்களில் அதிக கவனம் வேண்டும். நவகிரக அனுக்ரகம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் தடையின்றி நடக்கும். தொலைந்த பொருளை மீண்டும் கண்டெடுப்பீர்கள். 

கோபங்களை மறந்து எல்லா நேரங்களிலும் விழிப்புணர்வுடன் இருப்பது இந்த மாதத்தில் நடக்க இருக்கும் நஷ்டங்களில் இருந்து உங்களைக் காக்கும். 

கணவன் மனைவிக்குள் சமாதானம் செய்து கொள்வது நல்லது. குழந்தைகள் இதனால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். கால்களில் கவனம் வேண்டும். பெருமாளை சனிக்கிழமை வணங்கி வர நல்லது நடக்கும். 

மகரம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் நல்ல செய்திகளை கொண்டு வருகிறது. திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்கு அடித்தளமாக இந்த மாதம் இருக்கும். 

கிடைத்த மரியாதை அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை உயரும். புது தொழில் , புது வேலை தொடங்க இது நல்ல மாதம். எல்லாம் துலங்கும். Rasi palan in tamil.

முயற்சிகள் எல்லாம் திருவினையாக முடியும். நகை மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் பத்திரமாக வைக்கவும். வாகன பயணமும் சிக்கலில் முடியலாம். கவனம் தேவை. 

உடல் ஆரோக்கியம் கால் மற்றும் வயிற்று பகுதிகளை பாதிக்கும். உங்களை நம்பி வாழ்வை ஒப்படைத்த நபர்களை பாதுகாப்பது உங்கள் முக்கிய கடமை .

கும்பம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

கும்ப ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தரும் மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. திருமணம் , குழந்தை பேறு போன்ற சுப விஷயங்கள் உண்டாகும். கடன் சிக்கல் தீர்ந்து பணவரவு கிடைக்கும். 

வீடு கட்ட சில முயற்சிகளை எடுக்க வேண்டிய மாதம். அரசு பணி கிடைக்க முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். பொறுப்புடன் நடக்க வேண்டும். 

பொறுமை மற்றும் பக்தி உங்களுக்கு புது பாதையினை காட்டும். அம்மன் அருள் மற்றும் முன்னோர் பூஜை அவசியம் செய்ய வேண்டும். 

மீனம் ராசி 

ஆடி மாத ராசி பலன்
ஆடி மாத ராசி பலன்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பயணம் மகிழ்ச்சியை தருவதாக சொல்கிறது. பணவரவு செல்வ வளம் என நினைத்த எல்லாம் கைகூடி வரும். 

பிள்ளைகள் நன்மை செய்வார்கள். அரசு பணியில் கவனம் வேண்டும். கையெழுத்துக்களால் சிக்கல் வரலாம். ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்க நேரம் வந்து விட்டது. புதிய பதவி, சம்பள உயர்வு போன்றவை நடைபெறும். Rasi palan in tamil.

உடல் நலம் நன்றாக இருக்கும். பள்ளிப்படிப்பு நன்றாக இருக்கும். செலவுகள் சுபவிரயமாக நடக்கும். தொழில் மேன்மை பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். 

உங்களுக்கு நீங்களே தாழ்வாக உணர்கிறீர்களா? குறைந்த சுய மதிப்பு – அதற்கான உளவியல் காரணங்கள்

தமிழர் கண்ட சொத்து – மஞ்சள் உங்களுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் !

பொய்யர்கள் 6 வகைப்படுவார்கள் – அவர்களை எப்படி சமாளிப்பது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *